பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அவரிட வேண்டியது. அந்த ஊர் இன் திருப்தி. டையாதம்முடைஜனங்களுதி . வாத்தியாரும் ஜோஸியரும். முத்துஸ்வாமி ஐயர் கதவைத்திறந்தவுடன் ராம ண்ணா வாத்தியார் உள்ளே வந்தார். அவரைப் பார்த் தால் 45 அல்லது 50-வயதுக்குமேல் மதிக்கமாட்டார் கள். ஆனால் அவருக்கு சதாபிஷேகமாய் வருஷம் ஐந்து ஆய்விட்டது. (அதாவது இப்பொழுது வயது 90.) இன்னும் சிறுகுளத்தில் இவரைவிட்டு வேறொருவரை பிராமணார்த்தத்திற்குச் சொல்வதில்லை. அந்த ஊரில் ஒரு மாதத்திற்கு குறைந்தது இருப்பது சிராத்தத்துக்கு மோசமில்லை. அதில் பதினெட்டுக்குக் குறையாமல் வாத்தியாருக்குக் கிடைக்கும். கலத்தில் பரிமாறும் பொழுது போதும்' என்று சொல்லுகிற துர்வழக்கம் அவரிடத்தில் கிடையாது. 'எவ்வளவு போட்டாலும் சாப்பிடவேண்டியது நம்முடைய கடமை' என்று அவர் சொல்லுவார். அந்த ஊர் ஜனங்களுக்கும் அவர் பிராமணார்த்தம் சாப்பிட்டால் தான் திருப்தி. இந்தப் பிராமணர் இவ்வளவு சாப்பிடுகிறாரே, இதில் பாதியா வது நம்முடைய பிதுர்க்களுக்குக் கிடைக்காதா என்று அவர்களுக்கு எண்ணம். எதார்த்தத்தை அவர்கள் அறிந்ததில்லை. இவர் மத்தியானம் சாப்பிடுவது போ தாமல், ராத்திரிப் பட்டினியாகையால், இருபது முப் பது வடையை மட்டும் தின்றுவிட்டு சுத்தப்பட்டினி யாகவே யிருந்துவிடுவார். உளுந்து வடைதான் அவ ருடைய தேகக்கட்டு விட்டுப்போகாமல் அவரைக் காப்பாற்றி வருகிறது. ஒருநாள் ஜுரம் என்று கீழே படுத்துக்கொள்ள வேண்டுமே, கிடையாது. வயதினால் கொஞ்சம் கூனினவர்போல் இருந்தாலும் அவர் நடை கொஞ்சங்கூட தளர்ச்சி யடையவேயில்லை. ஆற்றங் கரையில் தினந்தோறும் அவர் தான் ஓடுகால் தள்ளு கிறது வழக்கம்.