178 கமலாம்பாள் சரித்திரம் இன்றைக்குக் காகிதம் இல்லைதான் போலிருக்கிறது. அதென்ன அப்படி எழுதாமலிருக்க மாட்டாளே. நடு விலே எங்கேயாவதுதாமதப்பட்டுப்போய்விட்டதோ?" என்றான். அதற்குள் உள்ளேயிருந்த அவனுடைய சினேகிதன் ஏதோ தெரியவில்லை போகலாம் வா. சாப் பிட்டுவிட்டு வந்து பார்த்துக்கொள்வோம். இல்லா விட்டால் சாப்பிட்டு விட்டுத் தபாலாபீசில் போயா வது விசாரிப்போம். காகிதம் இருந்திருந்தால் வந்திருக் கும். இத்தனை நாழிகையாயிற்று, இன்றைக்கு இல்லை போலிருக்கிறது' என்றான். அதற்கவன் ' என்னவோ ஸ்திரீகளை மாத்திரம் நம்பப்படாது. ஏதாவது உடம்பு கிடம்பு சௌக்கியமில்லையோ என்ன இழவோ ; இருக்கிறாளோ போய்விட்டாளோ அதைத்தான் யார் கண்டார்கள்' என்று சொல்லிவிட்டு ஒருபக்கமாகத் திரும்பிக்கொண்டு தன் கண்ணினின்று ததும்பிய நீரைத் துடைத்து, தன் மனதுக்குள் ' அடா போடா பைத்தியக்காரா, அவளே உன்னை லட்சியம் செய்ய வில்லையாம், உனக்கு என்னடா இப்பொழுது. ஆனாலும் பிறந்தகத்துக்குப் போன பொண்டுகளை நம்பக்கூடாது. கிடக்கிறாளடா விட்டுத்தள்ளு கழு தையை' என்று சொல்லிக்கொண்டு, தன் சிநேகி தனைப் பார்த்து ' ஏன் சாப்பிடப் போகலாம் வா, என்று உரக்கச் சொன்னான். பிறகு அவனும் அவனு டைய சினேகிதனுமாக சாப்பாட்டுக்குப் போனார்கள். அன்றைக்கு அவனுக்குச் சாப்பாடு சாப்பாடாகவே இல்லை. காகிதம் வராததற்குக் காரணங்களைப் பற்றித் தன் மனதுக்குள்ளேயே ஆலோசனை பண்ணிக்கொண் டிருந்த அவனுக்கு மற்றவர்கள் பேசிக்கொண்டிருந் தது ஒன்றும் கேட்கவில்லை. இன்ன சாதம் சாப்பிடு கிறோம் என்ற நினைவுமில்லை. ஒரு க்ஷணம் புன் சிரிப் பும் மறுக்ஷணம் கண்ணீர்த் துளியும் ஒரே க்ஷணத்தில் இரண்டும் உண்டாக அவன் முகம் ஐப்பசி மாதத்திய ஆகாயத்தின் முகம் போல மாறுபட்டுக்கொண்டிருந்