பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாயிருக்கிறது' 181 கேட்டால் என்ன பதில் சொல்லுகிறேன் என்று வேணுமானால் பாருங்களேன். பார்ப்போமே ; பய ணம் நிச்சயம். என்னால் தாங்கள் எவ்வளவு துன்பம் அடைந்தீர்கள். நான் பட்டபாடெல்லாம் நீங்களும் பட்டிருப்பீர்களே. என் துரையே, தாங்கள் என் பேரில் வைத்திருக்கிற அன்பை நினைத்தால் எனக்கு வருகிற சந்தோஷம் இவ்வளவு அவ்வளவு இல்லை. இப்பொழுது தங்களை அவ்விடம்காண சமீபித்துவிட்ட படியால் இன்னும் மேல் மேலும் பொங்குகிறது. நந்தன் சிதம்பரம் போக வேணும் என்று எவ்வளவு விசாரத்துடன் இருந்து அதைக் காணவும் எவ்வளவு சந்தோஷமடைந்தான் - அதுபோல நான் தங்களைக் காணவருகிற சந்தோஷத்தை அவ்விடம் வந்து தங்க ளிடம் ஒரு வார்த்தைக்கு ஒரு முத்தமாகத் தேனும் சர்க்கரையும் கலந்தாற்போல் கலந்து சொல்லி மகிழ் வேன். ஒருநாளும் நம்முடைய அன்பு தவறக்கூடாது. தங்களைக் காண தங்கள் அன்பை ஒரு பூஷணமாகப் போட்டுக்கொண்டு தங்கள் கவலையை நீக்கி இருவரும் களிப்படைய அவ்விடம் வருகிறேன். நான் நள வெண்பா முழுவதும் பாடம்பண்ணிவிட்டேன். நான் எழுதிய கடிதத்தில் பிசகு அதிகமாயிருக்கும். தாங் கள் அதைக் கிழியாமல் வைத்திருந்தால் அவ்விடம் வந்து தங்களிடம் பிழையைத் திருத்திக்கொள்வேன். என் உடம்பு சௌக்கியமாயிருக்கிறது. தங்கள் அன்பே எனக்கு பூரிப்பைக் கொடுத்திருக்கிறது. நான் அவ்விடம் வருகிறபடியால் கடிதத்தை நிறுத்தி நேரில் காண்போம். அதுவரையில் ஒவ்வொரு நிமிஷ மும் ஒவ்வொரு யுகமாயிருக்கிறது. தங்களிடம் பக்ஷி யாகப் பறந்து உடனே வந்துவிட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. பிரியநாயகர் பாதத்தில் தங்கள் இன்னுயிர்த் தோழியாகிய லட்சுமி நமஸ்காரம்.'