பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ரீனிவாசன் ஆனந்தத்தால் பரவசனாய் விட்டான் 183 தில்லை. அன்றைக்கு லட்சுமியைப் பற்றியே தியா னம் செய்து கொண்டு மேலே சொல்லியபடி அவன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பிச்சைக்காரன் பிச்சைக்கு வந்தான். ஸ்ரீநிவாசன் ' அவள் வந்தாலும் வருவாள் பிச்சைபோட' என்று ஆவலுடன் பார்த்தான். லட்சுமியும் அப்படியே சாதம் எடுத்துக்கொண்டுவந்தாள். இதுதான் சமயம் பேசுவதற்கு என்று ஸ்ரீநிவாசன் யோசனை செய்து கொண்டிருக்கும் போதே நெடுநாளாய்த் தன் அக முடையானோடு பேசவேண்டுமென்று ஆவல் கொண் டிருந்த லட்சுமி ' அவராகப் பேசுகிற வழியாயில்லை, இனி வெட்கப்பட்டு முடியாது, இதுதான் சமயம்' என்று எண்ணி ஆசை தூண்ட, வெட்கம் கண்டிக்க, மிகுந்த பயத்துடன் அரைவார்த்தையாக ' சாப்பிட வாருங்களேன்' என்று வெகு இனிமையாய்ச் சொல்லி மெதுவாய்ச் சென்றாள். அதைக் கேட்டவுடன் ஸ்ரீநி வாசன் ஆனந்தத்தால் பரவசனாய்விட்டான். 'பதில் சொல்லக்கூட அவனுக்கு சுயஞாபகமில்லை. அவன் உள்ளம் வசந்த ருதுவைப்போலக் குளிர்ந்து பூரித்தது. மெதுவாய்ச் சொல்லப்பட்ட தன் பெண்டாட்டி யின் வார்த்தைகள் அவன் காதில் வீணாகானம் செய்து கொண்டு நின்றது. அதைத் திருப்பித் திருப்பித் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அதிருசியான ஒரு பதார்த்தத்தை உண்டவன் போல் அந்த வார்த் தைகளை ஒவ்வொன்றாய் மெதுவாய்மென்று அனு பவித்து, கோயிலுக்குப் போய்விட்டுவந்த பலன் உடனே பலித்தது என்று மகிழ்ந்தான். இதுதான் அவர்கள் முதல் முதல் பேசின சமயம். பிறகு அவர் கள் அடிக்கடி ஒளிந்து ஒளிந்து பேசிக்கொண்ட ரகசியங்களை யெல்லாம் பலரறிய இங்கே சொல்வா னேன்? நமக்குள் தற்காலத்தில் சில சிறுவர்கள் ஸ்திரீகள்