பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



190 கமலாம்பாள் சரித்திரம் ஸ்ரீநி. - ' அகஸ்தியர் ஒரு தடவை முழுவதையும் ஆசமனீயம்பண்ணித் தீர்த்துவிட்டார். ராமர் ஒரு தடவை வயிற்றெரிச்சல் தீர அவமானம் பண்ணிவிட்டார். அப்படியிருக்கிறதிலேயே இந் தப்பாடாயிருக்கிறது. ல.-' ஏன் அதற்கு முன்னாலேயே தேவர்களும் ராட்ச தர்களுமாக இதனிடம் இருக்கிறதை யெல்லாம் கடைந்து எடுத்துவிடவில்லையோ! சந்திரன், லட் சுமி எல்லாவற்றையும் பறிகொடுத்த இந்தத் தரித்திரக்கடலுக்கு இத்தனை கர்வம் வேண்டி யிருக்கிறதா? நீங்கள் வந்திருக்கிறீர்களென்று கொஞ்சமாவது மதிப்பிருக்கிறதா பாருங்கள்.' ஸ்ரீநி. - ' ஒஹோ ! சரிதான், சழுத்திரத்தைச் சொல் லக் குற்றமென்ன, அதனுடைய லட்சுமி நீ வந்து விட்டாயல்லவோ, அந்த சந்தோஷமா அதற்கு? அப்படிச் சொல்லு. இந்த அமர்க்களத்தில் என்னை எங்கே அது லட்சியம் பண்ணப்போகிறது. மேலும் எத்தனையோ பேர்கள் அதில் ஸ்நானம் பண்ணுகிறார்கள். அவர்களுடைய பாவமெல்லாம் அதற்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்தப் பாவத்தையெல்லாம் போக்குகிறதற்கு பதிவிரதா ஸ்திரீகளுடைய பாததூளிதான் மருந்து. பதி விரதா சிரோமணி நீ வந்திருக்கிறாய். அதுதான் அதற்கு இன்றைக்கு இவ்வளவு ஆஹ்லாதம்!' ல. - ' அதற்கு ஒரு அலையாவது என்கிட்ட வந்ததா! என் மேலே ஒரு பொட்டு ஜலம் காட்டுங்கள். நீங்கள் சொல்லுகிறபடியில்லை. பிரகலாதனை இரணியன் சமுத்திரத்திலே தள்ளின்போது சமுத்திரம் அவனைத் தாங்கினதே, எதற்காக? அவன் மகா புண்ணியசாலி. அவனை யண்டினால் பாவமெல்லாம் போய்விடும் என்று. அதுபோல தாங்கள் ஐயரவாள் இப்பொழுது விஜயம்