192 கமலாம்பாள் சரித்திரம் -- - - - - - - - - - - - -- சொல்லி தன் முழுமனதையும் செலுத்திக் கவனித் தாள். ஸ்ரீநிவாசனும் அப்படியே செய்தான். கட லோசை விட புருஷர்களின் விளையாட்டரவமல்ல; வாலிய - ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல ; இனிய வீணையாதிகளின் கானம் அல்ல; வெற்றித் தம்பட் டத்தின் ஓசையுமல்ல. அந்தக் குரலில் களியாட்டத் தொனி கிடையாது ; சோகரசம் உண்டு. ஆனால் புத்திரனை யிழந்த பிதாவின் சோகம், புருஷனை யிழந்த மனைவியின் சோகம் முதலிய சோகங்களுக்கும் அதன் சோகத்துக்கும் சம்பந்தமில்லை. புலையன் வயிற்றிற் பிறந்து 'தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத' என்று பறையறைந்த புண்ணிய புருஷருடைய இரக்கங் கலந்த சுயஞாபகமற்ற சோகத்துக்கும் ' சுகமற்ற இப் பாழுலகத்தில் பந்துக்களையும் கொன்று சுகமனுபவிக் கக் கருதுவார்களா' என்று சோகித்த அர்ச்சுன னுடைய சோகத்துக்கும் காம்பீரிய தன்மை கடலோ சையின் சோகத்துக்கும் நிரம்ப நெருக்கமான சம்பந்தமுண்டு. ஆனால் அவர்களுடைய பறையோ சையையும் குரலோசையையும் போன்று சிறுத்திரா மல் அழிவற்று, ஆகாயமட்டுமளாவி அனேக ஆயிரம் சிரசுகளையுடையதாய் எள்ளருந்திசைகளோடி. பர மாத்மாவை மூர்த்தீகரித்து நின்றாற் போல் நிற்கும் ஹிமோத்பர்வதமானது திடீரென்று ஒரு நாள் தனது மௌனப் பிரசங்கத்தை நிறுத்தி வாய்திறந்து பேசி னால் எப்படியோ அப்படிப் பெரிய , கம்பீரமான, பொருள் நிறைந்த, வேத ரகசிய தத்வார்த்தத்திற்குத் தக்கதோர் குரலுடனே கடலானது நம்முடன் இடை யறாது வசனிக்கிறது. ஸ்ரீனிவாசனும் லட்சுமியும் காது கொடுத்துக் கவனிக்கவே, அவர்களுடைய இயற்கைக் குணத்தினாலும், அவர்கள் அப்பொழுது அடைந் திருந்த சமனத் தன்மையினாலும், அக்கடலோசை யின் ரகசியார்த்தம் அவர்கள் இருவருக்கும் ஏக காலத்தில் தொனித்தது. தொனிக்கவே அவர்கள்