பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



196 கமலாம்பாள் சரித்திரம் சானியம் போல அழாதேயுங்கள். சுவாமி நம்மை இவ்வளவு சோதனை பண்ணினது போதாதா! ஒன் றும் வராது, துக்கப்படாதேயுங்கள்' என்று தேற்றத் தேற்ற அவருக்குத் துக்கம் அதிகரித்தது. பிறகு அவராக ஓய்ந்து மனதாற கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு ' இதென்ன துக்கம்? அச்சானியம் போல' என்று தன்னையே சமாதானம் பண்ணிக்கொண்டார். இது நிற்க. சிறுகுளத்தில் ஒருநாள் பாதிராத்திரிக்கு மேலாய் விட்டது. ஊரெல்லாம் விளக்குகளை யணைத்துவிட்டு எல்லோரும் தூங்குகிறார்கள். அமாவாசை இருட்டு. ஊரெங்கும் பயங்கரமான நிசப்தம் குடிகொண்டிருக் கிறது. ஆகாயத்தில் மேகங்கள் இடையிடையே அடர்ந்து குகைகள் நெருங்கிய கணவாய்களைப் போல பயங்கரமாயும் விகாரமாயும் இருந்தன. மரங்க ளெல்லாம் இருண்டு மௌனமாயிருந்தன. சுப்பிர மணியய்யருடைய கிரஹத்தில் மாத்திரம் கூடத்தில் ஒரு விளக்கு எரிகிறது. அதற்கருகில் சுப்பிரமணி யய்யர் படுத்துக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தலை கழுத்தில் தரிக்கவில்லை ; படுக்கையில் உடல் தரிக்க வில்லை ; பேச முடியவில்லை. தலை ஓயாது புரளுவதும், கண்கள் மருண்டு விழிப்பதும், வாய் முக்குவதும் பிதற்றுவதுமாய் அவர் படாதபாடு பட்டுக்கொண் டிருந்தார். அருகில் பொன்னம்மாள் மட்டும் உட் கார்ந்திருக்கிறாள். மற்றவர்களெல்லாம் அயர்ந்து நித்திரை செய்கிறார்கள். அவர் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த பொன்னம்மாளைக் கையைப் பிடித் துக்கொண்டு, அதிக சிரமத்துடன் 'பாவி, அடிபாவி, குடியைக் கெடுத்துவிட்டாயே, ராட்சஸி! மோசம் பண்ணிவிட்டாயே ராட்சஸி ! சண்டாளி! தோசி! கொன்று போட்டாயே! இதற்காகவா நான் உன்னை கட்டினேன்! எத்தனை மருந்து உருண்டையாய்