பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'இனிமேல் பிழைக்கிறது துர்லபம்.' 199 என்று சொன்னார். இதற்குள் அவருடைய பந்துக்கள் சிலர் அவரைப் பார்க்க வந்தார்கள். அவருடைய தேகஸ்திதியைப்பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் உடனே பட்டணத்துக்கு ஒரு தந்தி கொடுத்தார்கள். சுப்பிரமணியய்யர் ' அண்ணா எப்பொழுது வரு வார்' என்று ஒரு மணிக்கு ஒருதடவை கேட்டுக் கொண்டிருந்தார். மறுநாள் அவருக்குத் தேகத்தில் உபாதி அதிகமாயிற்று. வயிற்று வலியும் கை கால் குடைச்சலும் அவரை சஹிக்க முடியாதபடி துன்பப் படுத்தின. அவர் படுக்கை முழுவதும் புரண்டு உருண்டு வருத்தப்படுகிறார். ஊர் முழுவதும் வந்து கூடியிருக்கிறது. சிலர் கால் பிடிக்கிறார்கள்; சிலர் மருந்து தயார் செய்கிறார்கள்; சிலர் விசிறிபோட்டு விசிறுகிறார்கள்; சிலர் அழுகிறார்கள் ; சிலர் தேற்று கிறார்கள் ; சிலர் பொன்னம்மாளைத் துக்கம் விசாரிக் கிறார்கள். கிராமங்களில் இவ்வித சமயங்களில் ஜனங் கள் எல்லாம் ஒருவரோடொருவர் போட்டி போட்டு உதவி செய்வதை யாரும் பார்த்திருக்கலாம். ஒரே வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடும்பங்களுள் ஒரு குடும்பத்தில் யாராவது இறந்து போனால், இங்கே யிருந்து அழக்கூடாது என்று மற்றொரு குடும்பத் தாரும் வீட்டுக்காரனும் சேர்ந்து சொல்லுகிற நாகரிக மான பட்டணவாசத்திய வழக்கம் பட்டிக்காட்டு ஜனங்களுக்குத் தெரியாது. சுப்பிரமணியய்யருக்கு வர வர உபத்திரவம் அதிகம் ஆகிறது. ' அண்ணா வந்து விட்டாரா' என்று நிமிஷத்துக்கு நிமிஷம் கேட்கிறார். முத்துஸ்வாமியய்யர் வருவதற்காக ரயிலிலிருந்து ஊர் வரையில் தபால் மாடுகள் தயாராய் வைக்கப்பட் டிருந்தன. இனிமேல் பிழைக்கிறது துர்லபம் என்று எல்லோருக்கும் தெளிவாயிற்று. முத்துஸ்வாமியய் யர் வந்து சேர வேண்டுமே என்று எல்லாரும் வழி பார்க்கிறார்கள். சுப்பிரமணியய்யருக்குப் பேசக்கூடத்