பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



200 கமலாம்பாள் சரித்திரம் கமல் திராணியில்லை. நிரம்ப வருத்தப்படுகிறார். அண்ணா வந்தாரோ என்று கேட்கத் தலையெடுக்கிறார். சுற்றி யிருப்பவர்கள் என்ன சொல்லுவார்கள், ' வருகிற சமயமாய்விட்டது, சீக்கிரம் வந்து விடுவார், ராந்தல் சுளுந்து எல்லாம் அனுப்பியிருக்கிறது, இதோ வந்து விடுவார்' என்று தைரியப்படுத்துகிறார்கள். நிமிர்த் திய தலையை அவர் கீழே போட்டுக்கொண்டு அழு கிறார். மறுபடி நிமிர்த்துகிறார், மறுபடி கீழே போடு கிறார். இவ்விதம் இருக்கிறபோதே முத்துஸ்வாமி யய்யர் வந்துவிட்டார் என்ற சமாசாரம் பரவியது. ஊருக்கு நாலுமைலுக்கப்பால் அவர் வரும்போதே அவர் வருகிற செய்தி இங்கே வந்துவிட்டது. முத்து ஸ்வாமியய்யர் ' அடித்து முடுக்கு ; சீக்கிரம் விடு, ஓட் டத்தில் தானே விடு' என்றிப்படி வண்டிக்காரனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் தாக்கீது கொடுத்துக்கொண்டு வந்தார். ஊருக்கு ஒரு மைலுக்குள் வந்தவுடன் வண்டியை விட்டு இறங்கி தபால் மாடுகளைக்காட் டிலும் வேகமாய் ஓடி வந்தார். இதோ வந்து விட்டார், அதோ வந்துவிட்டார். என்று ஊரெங்கும் செய்தி பரவியது. சந்தைப் பேட்டைக்கு வந்து விட்டார். இரண்டு நிமிஷமாயிற்று. சந்தைக்கு வந்துவிட்டார். இன்னும் ஒரே நிமிஷம் ; வீட்டுக்குள் வந்தார். வந்ததுதான் தாமதம்! சுப்பிரமணியய்யரிடம் அலறிக்கொண்டு போய் ' அப்பா சுப்பிரமணியம்' என்று அவரைக் கையாலெடுத்துக் கட்டிக்கொண் டார். அதுவரையில் பேசமாட்டாமல் இருந்த அவர் அண்ணாவைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு 'அண்ணா வந்தாயா! அண்ணா, நான் செத்துப்போகப் போகிறேன். உனக்கு நான் ரொம்பப் பொல்லாதவ னாகப் போனேன். எல்லாவற்றையும் மறந்துவிட வேணும், மன்னித்துவிடவேணும்; குழந்தைகளைப் பார்த்துக்கொள், இனிமேல் என் பளுவு விட்டது. ஐயோ உன் முகத்தைப் பார்போம் அண்ணா (அவர்