பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பொன்னம்மாளுடைய தாயார் குணவதி ! 205 கிரஹத்துக்கு வேண்டிய மற்ற காரியங்களை மேற் பார்க்கிறது ; என்றிப்படிச் சிறிதுகாலம் செய்து வந்தார். பொன்னம்மாளுக்கு ஒரு தாயார் உண்டு. அவள் பொன்னம்மாளைக் காட்டிலும் குணவதி. அவளுக்கு சங்கரி யென்று பெயர். அவள் தொட்ட காரியம் ஒன் றும் துலங்காது. பின்னால் இப்படித்தானிருக்கும் என்று அறிந்துதான் அந்த அம்மாளுக்கு 'சம்கரிப் பவள்' சங்கரி யெனப் பெயர் வைத்தார்களோ என் னவோ நாம் அறியோம். அவள் தன் மாப்பிள்ளை இறந்துபோன செய்தி கேட்டவுடனே பெண்ணுக் குத் துணையாக வந்து சேர்ந்தாள். வந்து சில நாளைக் கெல்லாம் சுப்பிரமணியய்யருடைய ஏராளமான சொத்துக்கு அவள் தன்னையே ' திவான் ரீஜண்டாக' நியமித்துக்கொண்டு சகல சாரியங்களையும் நடத்தத் தலைப்பட்டாள். அவளுடைய சுற்றத்தாருக்கு அன்று முதல் யாதொரு குறைவுமில்லை. ஒருவர் குடும்ப சஹிதமாய் மூன்றுமாதம், நான்குமாதம் என்று இப் படி. சிறுகுளத்தில் வந்து கூடாரமடித்துக் கொண்டிருந் தார்கள். முத்துஸ்வாமி அய்யருக்கு இந்த சொத்து இப்படி விரயமாகிறது சஹிக்கவில்லை. பிள்ளை யில்லாத சொத்தா என்று கண்டிக்க எத்தனித்தார். தேவி சங்கரி எதிர்த்து யுத்தத்துக்குத் தலைப்பட் டாள். இப்படியந்தத் தாடகை யுத்தத்தைத் தொடுக்கவே அவர் கொஞ்சம் பின்வாங்கினார். அது கண்டு அந்த ராட்சஸி பின்னும் துணிவுற்று அவரால் சுப்பிரமணியய்யர் வீட்டு விஷயமாகக் கொடுக்கப் பட்ட ஒவ்வொரு உத்தரவையும் அப்பீலில் மாற்றி விட்டாள். முத்துஸ்வாமியய்யர் சுந்தரத்தினிடம் அதிக அன்பு வைத்திருந்தார் என்று நமக்குத் தெரி யுமே. அது மத்தியில் மங்கியிருந்தபோதிலும் இப் பொழுது முன்னிலும் பதின் மடங்காய் அதிகரித்தது.