பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



206 கமலாம்பாள் சரித்திரம் - -- - - - அதைக்கண்ட சங்கரி சுந்தரத்தைத் தன் பெரிய தகப்பனாரிடம் போகவே கூடாதென்று கண்டித்து, தண்டித்து நிறுத்தி விட்டாள். முத்து ஸ்வாமியய் யருக்கு இங்கே யிருந்து இந்த அற்பத்தனத்தையும், ராட்சஸத்தனத்தையும், கொடுமையையும் பார்த்துக் கொண்டு கஷ்டப்படுவதைக் காட்டிலும் உயிரை விட்டுவிடலாம், அல்லது இமயகிரிச் சாரலில் சென்று காஷாயந் தரித்து வாழலாம் என்று தோன்றிற்று. அவருக்கு உண்டான விரக்தி வைராக்கியத்தில் கமலாம்பாள் இடத்தில் கூட அசூயை உண்டாயிற்று. அவள் தன் புருஷ சிச்ருஷையில் குழந்தை போன துக்கத்தைக்கூட மறந்து இருந்தாள். இப்பொழுது அவள் என்ன உபசரித்தும் அவர் அவளை உதாசீன மாய் உதறி யெறிந்தார். அவளுக்குத் தன் பர்த்தாவின் அன்புதான் ஆதாரமாயிருந்தது. அதற்கும் இப் பொழுது குறைவு நேரிட்டது. முத்துஸ்வாமியய்யர் சந்நியாசத்தில் விசேஷ சபலம் வைக்கத் தொடங் கினார். ஆனால் கமலாம்பாளைத் தனியே விட்டுப்போக அவருக்கு சம்மதப்படாததால் அந்த நல்ல காரியத் துக்கு அவள் தான் தடையாயிருக்கிறதாக அவருக்குப் புத்தியில் பட்டது. அதுமுதல் அவர் அவளை ஒரு நாளும் இல்லாதபடி கொடுமையாய் நடத்த ஆரம் பித்தார். இவர் நடத்தையிப்படி. மாறுபடுவதைக் கண்ட கமலாம்பாள் அதைத்திருத்த தன்னாலான மட்டும் முயன்றும் கூடாமல் தனக்குள்ளேயே துக் கித்து உருகினாள். அவள் அப்படி அவரை விட்டு ஒதுங்கித் தனக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந் ததைக் கவனித்த முத்துஸ்வாமியய்யர் ' அன்பாவது மண்ணாவது இந்த உலகத்திலேயா! பார்! நம்மிடத் தில் அடிக்கடி ஓடி ஓடி வந்து கொண்டிருந்த கழுதை இப்பொழுது ஏன் என்றுகூட விசாரிக்கிறதில்லை. அப்படித்தான் இருக்கட்டும். நமக்கு நல்லதுதான். நாம் சந்நியாசம் வாங்கிக்கொண்டு புறப்பட்டு விட