211 குசு குசு மந்திரம், குடிகெடுக்கும் யோசனை மணியய்யருடைய மரணத்துக்குக் காரணம் என்று ஊரில் எல்லாருக்கும் சந்தேகமுண்டு. ஆனால் கமலாம் பாள் அதைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேசவே யில்லை. சங்கரியம்மாள் பணத்தைக் கண்டபடி வாரி யிரைத்துக் கொண்டிருப்பதைக்கண்ட சுப்பு தனக் கும் அதில் ஏதாவது கிடைக்க வேண்டுமென்று ஆசை யடைந்து கமலாம்பாள் மேல் சாக்குப்போட்டு சங்கரி யம்மாளிடம் மேலே சொன்னபடி சொல்ல, சங்கரி யம்மாள் ' அந்த முண்டை அப்படிச் சொல்லலாகி விட்டதா , நாக்கை இழுத்து வைத்து அறுத்துவிட் டால் தான் என்ன? என் பெண்மட்டும் தாலியறுக்க வேணும். அவள் மட்டும் வாழவேண்டுமோ; சொல்லு கிறேன் வழி அந்தச் சிறுக்கிக்கு' என்று கோபித்துக் கொண்டு சுப்பம்மாளுக்கு ஒரு பெரும் பூசனிக் காயைத் தூக்கிக் கையில் கொடுத்து மறுநாளும் வரும் படி உத்தரவிட்டு அனுப்பினாள். சில நாளைக்குப் பிறகு முத்துஸ்வாமியய்யர் ஆருத் திரா தரிசனத்துக்காகச் சிதம்பரத்தில் இறங்கிவிட்டு சீக்கிரம் ஊருக்கு வருவதாகக் கமலாம்பாளுக்கு எழுதி னார். அவள் தன் பர்த்தா வருகிற சந்தோஷத்தை வீடு கூட்டி முதல் வந்தவர்கள் போனவர்கள் எல்லாருக் கும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தாள். இந்தக் கடிதம் வந்த அன்று பொன்னம்மாளுடைய கிரஹத்தில் சங்கரியம்மாள், சுப்பம்மாள், ஈசுவரதீட் சதர் என்ற ஒரு தீட்சதர் மூன்று பேராகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அதிக தாழ்ந்த குரலுடன் பேசிக்கொண்டிருந்ததால் என்ன பேசிக் கொண்டிருந்தார்களென்று எனக்குச் செவ்வையாய்த் தெரியாது. ஆனால் கமலாம்பாள் என்ற பெயர் மட் டும் அடிக்கடி கேட்டது. எல்லாம் முடிந்தபிறகு சங்கரியம்மாளுடைய செலவில் ஈச்வர தீட்சதரும் சுப்புவும் சிதம்பரத்துக்குப் போவதாய்த் தீர்மானம் செய்தார்கள். ' வந்த பிராமணனை அப்படியே திரும்