பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூழ்ச்சி உருவாகிறது 213 அவர்கண்டு பிராந்தராய் நின்று மதிமயங்கிக் குழந்தை நடராஜனைப்பற்றியுண்டான ஞாபகத்தை சந்தோஷ மாய்க் கண்டித்து பகவானுடைய தாண்டவ ஸ்வ ரூபத்தில் அமர்ந்து பிரம்மானந்தத்தில் மூழ்கி என் குழந்தையைத்தமது பாதாரவிந்தத்தில் சேர்த்துக் கொண்டது போல என்னையும் சேர்த்துக்கொண்டு அனுக்ரஹிக்க வேண்டுமென்று அந்தரங்க பக்தி யுடன் ஈசுவரனைத் தியானிக்கும்போது ' யார் முத்து ஸ்வாமியா ; எப்பொழுது வந்தாய் , வா வா இப் பொழுதுதான் வந்தாயோ?' என்று ஒரு குரல் கேட் டது. திரும்பிப் பார்த்தார். சிறுகுளம் ஈச்வர தீட்ச தர் நின்றுகொண்டிருந்தார். அவரை வந்தீரா என்று விசாரித்துவிட்டு பகவத் தியானத்தில் மறுபடி அவர் பிரவேசிக்க, ஈச்வர தீட்சதர் அந்த மட்டுடன் அவரை விடச் சம்மதமில்லாமல் 'முத்துஸ்வாமி, க்ஷேமந் தானே ; உடம்பு ஏது இளைத்திருக்கிறாற்போல் இருக் கிறது ; எங்கே பம்பாய்க்கா போயிருந்தாய்!' என்று இப்படிப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே கூட்டத் தினின்று அவரைப் பிரித்துத் தனியே ஓரிடத்துக்குக் கூட்டிப்போய் மற்றும் க்ஷேமலாபங்களை அன்புடன் விசாரிப்பவர்போல விசாரித்துப் பிறகு வெகு உறவாக நெருங்கி தாழ்ந்த குரலுடன் 'அநியாயமாய் அசந் தர்ப்பமாய் போய்விட்டது, போனதைக் குறித்து ஒன்றும் விசனப்படவேண்டாம். உனக்கே இதற்குள் சமாசாரம் தெரிந்திருக்கவேணுமே' என, முத்து ஸ்வாமியய்யர் ' என்ன விசேஷம்! எனக்கும் ஒன்றுந் தெரியாதே' என்றார். தீட்சிதர் ' அப்படி ஒன்று மில்லை , ஒன்றுமில்லை. உனக்குத் தெரிந்திருக்கு மென் றல்லாவா எண்ணினேன். இல்லாவிட்டால் நான் பிரஸ்தாபமே பண்ணியிருக்க மாட்டேனே' என, முத்துஸ்வாமியய்யர் ' என்ன சமாசாரம், வெறுமனே சொல்லுங்கள்' என்று பலவந்தம் பண்ண , தீட்சிதர் சுவாமி தரிசனம் பண்ணுவோம், அந்த இழவுப்பேச்சு