216 கமலாம்பாள் சரித்திரம் முத்.-- நிஜமாகத்தானா? யார், என் அகமுடை யாளா, எப்பொழுது, எங்கே, என்றைக்கு, யார் ? நீர் கள் சொல்லுகிறது நிஜந்தானா? தீட். - பொய்யாக விருக்கவேண்டு மென்பது தான் என் பிரார்த்தனை யப்பா. ஊர் வதந்தியை நான் சொன்னேன். என்னவோ கைப.ங்களவுமாகக் கண்டு பிடித்து விட்டதாக எங்கேயும் சொல்லிக்கொண் டிருந்தார்கள். நமக்கு என்ன வேண்டியிருக்கிறது 'ரூபம் மகத்தே முத்.- எந்தப் பயலோடே இவ்வளவும் ? ஆ! தீட்.- அதெல்லாம் என்னத்துக்கு விசாரிக்கிறாய்! விட்டுத் தள்ளு கழுதையை! அதைச் சொன்ன நாக குக்குக்கூட தோஷம் சொல்லுகிறார் ஸ்மிருதிக்காரர் போனாற் போகிறது. பிள்ளையைப் பறித்துக்கொண்டு போய் விடலாம், பெண்டாட்டியைப் பறித்துக் கொண்டு போய்விடலாம், பகவானைப் பறித்துக் கொண்டு போகமுடியுமா? எங்கும் நிறைந்தவராய் எல்லாருக்கும் சமமாய் - என்று சொல்லிக்கொண் டிருக்கும் போதே தேவி சுப்பம்மாள் அவர்களிடம் வந்து சேர்ந்தாள். தீட்சதரும் அவளும் கூடிப் பேசிக்கொண்டபடி அவர் பேசி முடித்தவுடன் அதுவரையில் மறைந்து நின்று கவனித்துக்கொண்டிருந்த அவளும் வந்து சேர்ந்தாள். வந்தவுடன் முத்துஸ்வாமி, என்னப்பா குழந்தை போச்சு , தம்பி போனான். இவ்வளவு போயாதா? (போதாதா) அந்தப் பாவி முண்டையுமா அப்படிப் பண்ணவேணும். என்னவோ உன் தலை லெயுத்து, நீ ஓயு பிள்ளை பியந்து இப்படியெல்லாம் அவதிப்பட வேண்டுமென்று வயம் வாங்கிவந்தாய் என்று விஸ்தாரமாய்ப் பிரலாபிக்கத் தொடங்கினாள். முத்துஸ்வாமியய்யருக்கு கொஞ்சம் அறைகுறையா