218 கமலாம்பாள் சரித்திரம் யிழந்தேன், சொத்தனைத்தையு மிழந்தேன், அவ்வள வும் போதாதென்று என்பேரையும் என் பெண்டாட்டி யையுமா இழக்கவேணும்! ஐயோ ராட்சஸி, எனக்கு எமனாக வந்தாயா! நீ பேசாமல் கொஞ்ச நாளாயிருந்த போதே எனக்குச் சந்தேகமுண்டு. ஸாஹஸி! என் காலைப்பிடித்துக் கட்டியழுதையா, நீலி சண்டாளி, முகரையைப் பாரு, முகரையைக் குத்து. அந்த ஸாஹ ஸக் கண்ணிலே அழகென்ன வேண்டியிருக்கிறது அழகு! கன்னத்திலறைந்து வரிசையாக இருக்கிறதே அந்தப் பல்லை உடை ; சிவசிவ! நான் இவளுடன் வாழ்ந்திருக்கவேண்டுமா! நான் அங்கிருந்தால் ஒரு கொலை நடந்திருக்கும்; உன்னைக் கொல்வானேன், நான் செத்துப் போகிறேன் ; உனக்கு ஊரெல்லாம் புரு ஷன் ; சுகமாய் தீர்க்கசுமங்கலியாய் சாசுவதமாய் வாழ் : நீ ஏன் சாகிறாய்? - ஐயோ உனக்கும் எனக்கும் இப்படியா முடியவேணும்! நீலி, சண்டாளி, பாதகி, ராட்சஸி. ஒரு வேளை சுப்பு சொன்னது பொய்யா யிருக்குமோ? தீட்சிதர் பொய் சொல்லமாட்டாரே ; ஒரு வேளை இரண்டு பேரும் கலந்து பேசிக்கொண்டு செய்திருப்பார்களென்றால், அதில் அவர்களுக்கு என்ன லாபம்? எனக்கு அவர்கள் விரோதிகளுமில் லையே , அவர்கள் பொய்சொல்லவாவது! நம்முடைய அதிர்ஷ்டத்துக்கு எதுவும் அசாத்தியமில்லை!'என்று இப்படி அவர் யோசனை செய்து கொண்டு போகும் பொழுது, சிறுகுளத்து மனிதர் நாராயண அய்யர் என்ற ஒருவர் முத்துஸ்வாமியய்யரைக் கண்ட வுடன் துக்ககரமான குரலுடன் யோகக்ஷேமங்களை விசாரிக்கத் தொடங்கினார். முத்துஸ்வாமியய்யருக்கு இருந்த சந்தேகம் மீதியில்லாமல் நிவர்த்தியாயிற்று. இந்த உலகத்தில் சுவாமியாவது பூதமாவது, நல்ல வனுக்குக் காலமில்லை. கொலை, வியப்பசாரம், திருட்டு இதுதான் இந்த உலகத்துக்குத் தகுந்த தொழில். ஒரு பாவத்தையு மறியாத எனக்கு இப்படி ஆபத்து மேல்