பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



220 கமலாம்பாள் சரித்திரம் குளிர்ந்த காற்று வேறே வேண்டுமா?' என்று அவ் விடம்விட்டு காற்றடிக்காத உஷ்ணமான ஒரு இடம் போய் உட்கார்ந்தார். அங்கே சில கிளிகள் ஒன்றோ டொன்று கொஞ்சி விளையாட வந்தன. இவர் 'சி தரித்திரப் பிணங்களா, ஊரெல்லாம் வியப்பசாரமாய்க் கிடக்கிறது, உங்களுக்கு விளையாட்டென்ன வந்தது, இங்கே விளையாட்டு!' என்று ஒரு கல்லை யெடுத்து எறிய அவைகள் பறந்து போய்விட்டன. 'மனிதனுக்கு இந்த உலகந்தான் சரி. எல்லாப் பயல்களும் வியப் சாரம் பண்ணுங்களடா ; கல்யாணமென்ன வந்தது, கல்லெடுப்பு என்ன வந்தது; எல்லா முண்டைகளும் தட்டுவாணித்தனம் பண்ணட்டும். திருடு, குத்து, கொல்லு , அதுவும் ஒரு வேடிக்கைதான். இந்த உல கத்துக்கு அதுதான் சரி' என்றிப்படித் தனக்குள் பிதற்றிப் பகற்பொழுதைப் போக்கினார். கமலாம் பாளுடைய ஒவ்வொரு செய்கையும் ஞாபகத்துக்குக் கொண்டுவந்து ' சிரிப்பைப்பார் சிரிப்பை , முகம் ரோஜப் பூப்போலே இருக்கிறதாம், அப்படி ஞாபகம் ; நாராயணசாமியை முத்தமிடுவதற்கு என்னை முத்த மிட்டுப் பழகிப் பார்த்துக் கொள்ளுகிறாயோ? சீ நாயே மேலே கையைப் போடாதே, வெட்கம் கெட்ட படவா. அழுகிறாயா அழு! ஒரு புருஷன் கைக் கீழே இருக்கவேண்டி யிருக்கிறதே என்று அழுகிறாயோ அழு!' என்றிப்படி ஒவ்வொன்றையும் அவளுக்கு விரோதமாக வியாக்கியானம் பண்ணி மனதில் தோன் றியபடி யெல்லாம் அவளை வைதார். பிறகு அஸ்த மித்தவுடன் எழுந்திருந்து 'பாடும் பட்சிகளே, வீசும் காற்றே, மலரும் புஷ்பங்களே, துளிர்க்கும் மரங்களே நீங்கள் தான் இந்த உலகத்துக்கு நல்லவர்கள். உங்களை யெத்தனை புழுக்கள் ஹிம்சை செய்கின்றன. (ஒரு வாடிப்போன புஷ்பத்தை எடுத்து) இந்தப் பூ யாரை என்ன பண்ணிற்று? இது போன போக்கைப்பார். இப்படியே நீங்கள் எல்லாம் சீக்கிரம் தொலைய