பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



222 கமலாம்பாள் சரித்திரம் கழுத்திலும் சுருக்கிட்டு கொண்டு 'தரித்திர உலகமே, நான் போய்வருகிறேன். அடி குட்டி கல்யாணி உன் னம்மாள் முத்துஸ்வாமியை ஜாக்கிரதை பண்ணினது போல நீயும் ஸ்ரீநிவாசனை ஜாக்கிரதை பண்ணிவிடு. முத்துஸ்வாமி யென்ற பெயர் இன்றோடு முடிந் தது' என்று சொல்லி விட்டு ஊசல் ஆட ஆரம்பித் தார். அப்பொழுது திடீரென்று 'முத்துஸ்வாமி, முத்துஸ்வாமி, முத்துஸ்வாமி!' யென்று மூன்று தரம் ஒரு சப்தம் கேட்டது, ' எங்கிருந்து வந்தது? அவ் வேளையில் தன்னையறிந்தவராக யாரிருக்கக்கூடும்?' என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றும் தென் படவில்லை, ' சப்தமுமில்லை, ஒன்றுமில்லை ; நம்முடைய மனது நம்மையே மோசம் செய்கிறது' என்று சொல்லி மறுபடியும் கழுத்துச்சுருக்கை இறுக்க எத்தனித்தார். மறுபடியும் 'முத்துஸ்வாமி, முத்துஸ் வாமி, பயித்தியக்காரா ' என்று மூன்று வார்த்தைகள் தெளிவாய் சந்தேகத்துக்கு சற்றும் இடமில்லாமல் கேட்டன.