பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



25 இங்கற்றவர்க்கு அங்குண்டு விஸ்வரூபதரிசனம். முத்து ஸ்வாமியய்யர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாதொரு காரணமும் புலப்படவில்லை. திடீரென்று அவ்வேளையில் நிஷகாரணமாக இவ்விதம் சப்தம் கேட்கவே, அவருக்கு வெகு பயம் உண்டாய் விட் டது. கழுத்துச் சுருக்கை நழுவ விட்டுவிட்டார். கை கால்கள் நடுங்கின. நெஞ்சும் மார்பும் பதை பதைத்தன. உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. தன்னறிவில்லாமலே கையைத் தட்டி வெளியே ஓடி விட எத்தனித்தார். அதற்குள் மறுபடியும் 'முத்துஸ் வாமி பயப்படாதேயடா பயித்தியகாரா. இப்படித் தான் பயப்படுவார்களா!' என்று வெகு குளிர்ச்சியான ஓர்சப்தம் கேட்டதுமன்றி அம்மண்டபம் முழுதும் திடீ ரென்று ஹேமதூமத்துடன் கூடிய பிரகாசம் ஒன்று தோன்றிற்று. அந்தப் பிரகாசத்தின் மத்தியில் ஓர் உயர்ந்த சிலா விமானத்தின் மீது யாரோ திவ்விய மங் கள ஸ்வரூபத்தையுடைய மகா புருஷர் ஒருவர் தனது இடது திருக்கரத்தால் செவ்வானம் போல் சிவந்து அழகிய மனோகரமான சடாபாரத்தையுடைய தனது உத்தமாங்கத்தை ஏந்தித் தாங்கிக்கொண்டு மற்றோர் கரத்தை முழந்தாள் மட்டும் தீர்க்கமாக நீட்டி க்ஷராப் தியில் ஆதியந்தமில்லாத ஜகந்நிவாசராகிய சாக்ஷாத் பகவான் லட்சுமி சமேதராய் அனந்த சயனத்தின் மீது அரிதுயிலில் அமர்ந்தது போல வெகு கம்பீரமாய் அமர்ந்திருந்தார். ப்ரஸாதஸமுகே தஸ்மின் சநத்ரேச விசதப்ரபே ததாசக்ஷஷ்மதாம் ப்ரீ தீராஸீ த்ஸமரலாதவயோ :