பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



224 கமலாம்பாள் சரித்திரம் என்றபடி அன்புமயமாய் விளங்கிய அவருடைய முக மானது குளிர்ந்த மிருதுவான காந்தியையுடைய இளஞ் சந்திரனைப்போல யாவருக்கும் பிரீதியை யுண்டுபண்ணத்தக்க அற்புதமான ஓர் வசீகர சக்தி யைப் பெற்றிருந்ததுமன்றி பரிசுத்தமான ஜலத்திற் பிறந்து பூச்சி புழுக்களால் ஹிம்சிக்கப்படாது வேதாந்த உபமானங்களுக்கிடமாகும்படி குளிர்ந்து, பரந்து, பசந்து, பற்றற்று, மயங்காது அனுபவிக்கும் இலைகளின் மத்தியில் உத்தம வாழ்க்கையின் லட்சண பூர்த்தியாய், கம்பீரமான புருஷச் சாயை* யுடன் மேல்நோக்கி மலர்ந்து மந்தமாய் ஆடும் அழகிய தாம ரைப் புஷ்பத்தைப்போல நிர்விசாரமும் சற்சம்சர்க்க மும், பரிசுத்தமும், கௌரவமும், மிருதுத்துவமும், அழகும், உயர்குடிப் பிறப்பும், உற்சாகமும் ஒருமித்து, உறவாடி, நகையாட மலர்ந்து விளங்கி நின்றது. அவருடைய உயர்ந்த மண்டையும், விசாலமான நெற்றியும், அவருடைய நெருங்கிய புருவங்களும் சற் றுத் தாழ்ந்த கபோலமும் ஞானத்தையும் அதனாலுண் டாகும் சாந்தத்தையும் காட்டின. அவருடைய சிவந்து இடைவிடாது புன்னகை தவழ மலர்ந்த அதரப்பிரதேசம் ததும்பிப் பெருகும் அவருடைய ஆனந்தத்தை யுணர்த்திற்று. அவருடைய கண்களோ

  • புஷ்பங்களுள் ராஜா தாமரை. ரோஜாவும், அல்லியும் ராணிகள். ரோஜாவின் பளபளப்பு தாமரைக்கில்லை. தாமரையின் கம்பீரம் ரோஜாவுக்கில்லை. தாமரையின் அழகு புருஷனுடைய அழகு. ரோஜாவின் அழகு ஸ்திரீயின் அழகு. தாமரை பூஜா யோக்கியம் : ரோஜா பூஷண யோக் கியம். யானை, கருடன், தாமரை ஒரு வர்க்கம். தாமரையின் குணம் கல்யாண குணம். ரோஜாவின் குணம் நாயகி நாயக ரது ஸரஸஸல்லாப குணம். தாமரை பரிசுத்தத்துக்கும், ரோஜா அழகுக்கும் விசேஷம். தாமரையின் வாசனை புருஷ. னுடைய வாசாலகம், ரோஜாவின் வாசனை ஸ்திரீயின் வாசா லகம். ரோஜாவும் அல்லியும் முறையே உத்தானுபாத. ருடைய மனைவிமார் சுனீதி சுருசியைப்போல்.