பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



228 கமலாம்பாள் சரித்திரம் T என்று வாய்விட்டுப் பாடியுருகி, காயத்திரி ஜெபத் துக்கு ஆரம்பிக்க, அத்தருணத்தில் கணார், கணார், கணார் என்று கோயில் அர்த்தசாம மணி யடித்தது. நிச்சப்தமான ராத்திரி சமயத்தில் கடலோசை போன்ற கம்பீரமான அந்த மணி முழக்கம் காதில் பட்டவுடன் முத்துஸ்வாமியய்யர் மயிர்க்கூச்செறிந்து புளகாங்கித்து 'ஐயோ உன் மகிமைதான் என்ன மகிமை' என்று சொல்ல மாட்டாமல் சொல்லி ஆனந் தித்து ' உன்பாதம் எனக்கில்லையோ ; நான் எப்போது உன் கருணைக்கு உரித்தாவனோ ; என் மனக் கவலையை ஒழிப்பது உனக்கருமையோ' என்று உலக ஞாபக மழிந்து உருகி மெய்ம்மறந்து, நைந்து, ஏங்கி, இரங்கி, கடுகைத் துளைத்துக் கடலை யடைத்தது போல சர் வோத்கிருஷ்டமான சகல வேதாந்த தத்துவங்களையும் ஒருமித்து உருட்டித் திரட்டிச் சாரசங்கிரஹமாகச் செய்யப்பட்ட 'ஓம்' என்ற மூலப்பிரணவ மந்திரத் தை உச்சாரணம் செய்யும் பொழுது, இவருடைய பிராந்தியோ அல்லது குரு தரிசன விசேஷமோ அறி யேன் - திடீரென்று பூமிமுதல் ஆகாயம் மட்டும் நில வினும் இனிதாய், வெயிலினும் காந்தியாய், தென் றலே உருவு கொண்டு வந்தாற்போல ஜில், ஜில், ஜில் என்று குளிர்ந்து மந்தமாய் அசைந்து ஆடும் ஒரு. திவ்ய தேஜஸானது இடைவெளியற்று எங்கும் பறந்ததுபோல அவருக்குத் தோன்றிற்று. * அவ் வாறு தோன்றிய அந்தத் தேஜோ மகிமையில் |

  • அன்று பகல் முழுவதும் கடவுளை நிந்தித்துக் கொண் டிருந்த அவருக்கு அவ்வளவு பக்தி எவ்விதம் உண்டாகும் என்று சிலர் சங்கிக்கலாம், ஆனால் சுபாவத்தில் அவர் வெகு பக்திமான் என்று முன்னமேயே பலமுறை சொல்லப் பட்டிருக்கிறது. அன்று வந்த நாஸ்திக வெறுப்பு மத்தியில் வந்ததோர் ஜ்வரம் போல. ராமர்கூட சீதையைப் பிரிந்த காலத்து அறத்தினாலினி யாவதென, தாமத்தினால் இனி யென்ன பிரயோசனம் என்று பலமுறை புலம்பவில்லையா?