பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'கண்டேன், கண்டேன், காணாததைக் கண்டேன்.' 231 னாய், பெருமையினும் பெருமையாய், இனிமையினு மினிமையாய், அநேக கோடி சூரியர்கள் ஏககாலத்து உதித்தாற்போல பார்க்கப் பதினாயிரங் கண்களும் போதாத அபரிமிதமான ஜோதி ஒன்று தோன்று வதை முத்துஸ்வாமியய்யர் கண்டார். தனது கண் களால் கண்டு பாதாதிகேசம்வரை மயிர்க்கூச்செறிந்து புளகாங்கித்து, ஆ ! என்று திறந்த வாயும், இமையாது விழித்த கண்ணுமாய் ஆனந்த சாகரத்தில் மூழ்கி, மதிமயங்கி, மெய்ம்மறந்து, பரவசமாய்ப் பிரமித்து, ஸ்தம்பித்தும் நிற்க, காட்டியொளிக்கும் மின்னல் போல் ஒரு கணத்துள் மறைந்தது அக்கரையில்லாக் காட்சி. மறைந்தும் நெடுநேரமாக முத்துஸ்வாமியய் யருக்கு உணர்ச்சி வரவில்லை. உணர்ச்சி வந்தவுடன் 'கண்டேன் கண்டேன் காணாததைக் கண்டேன்' என்று மகிழ்ந்து, 'மண்ணாதிபூதமெல்லாம் வைத்திருந்த நின்னிறைவை கண்ணாரக்கண்டு களித்தேன் பராபரமே மண்ணுமறிகடலு மற்றுளவு மெல்லாமுன் கண்ணிலிருக்கவுநான் கண்டேன் பராபரமே.' 'ஆதியநாதியுமாகி - எனக் கானந்தமாயறிவாய் நின்றி லங்குஞ் சோதி மௌனியாய்த்தோன்றி - அவன் - சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி - சங்கர சங்கர சம்பு - சிவ-சங்கர சங்கர சம்பு,' என்று ஆனந்தக்களிப்புற்று வாயில் வந்தபடி யெல் லாம் பாடி மண்டபத்தையடைந்து சுவாமிகளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அவருடைய திருவடித் தாமரைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, * தங்காமல் வந்தொருவன் தற்சொருபங் காட்டி யெனை கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி' என்று அவரைப் பாடி ஸ்துதி செய்து எழுந்து தான் கண்டதைச் சொல்லி ' தேவரீர் யாரோ அறியேன்.