பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



26 அழுதலன்றி மற்றயலொன்றுஞ் செய்குவதறியாள். இங்கே முத்துஸ்வாமியய்யர் நிலைமை இப்படி யிருக்க சிறுகுளத்திலோ, கமலாம்பாள் ' அவர் எப் பொழுது வருவாரோ, எப்பொழுது என்கலி தீருமோ' என்று ஏங்கி அவர் வரவை எதிர்பார்த்திருந்தாள். ஆருத்திரா தரிசனத்துக்குச் சிதம்பரத்திலிருந்துவிட் டுப் பிறகு வருவதாக எழுதியிருந்ததால் ஆருத்திரா தரிசனம் எப்பொழுது கழியப்போகிறது, நான் எப் பொழுது அவர் முகத்தைக் கண்டுகளிப்பேன் என்று இருந்தது அவளுக்கு. ஒரு நாள் போகிறது ஒரு யுகமா யிருந்தது. உடல் சோர்ந்து, ஒரு காரியமும் ஓடாமல், கொட்டாவிவிட்டு நாட்களைக் கழித்தாள். தன் பர்த்தா வின் கடிதத்தில் பணம் திருப்பப்பட்டது என்று எழு தப்படாததினால் 'பணம் போனதுதான். அது போனால் போகிறது, அவராவது க்ஷேமமாய் வந்து சேரவேண் டும்' என்று கவலைப்பட்டாள். ' தன் கணவர் வந்த பிறகு தரித்திரத்தின் கொடுமையை அவர் உணராத படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர் இது வரை அனுபவித்து வந்த சுகங்களுக்கு யாதொரு விஷ யத்திலும் குறைவு வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று அதற்கு வேண்டிய ஆலோசனை களெல்லாம் செய்துகொண்டிருந்தாள். ' வீடு இன்ன விலைக்குப் போகும், கொலுசு , காப்பு, ஓலை இன்ன இன்ன விலைக்குப்போகும், முருகு இன்ன விலைக்குப் போகும், காரையும் அட்டிகையும் என்ன குறைந்தா லும் இந்த விலைக்குப் போகும்' என்று தன் மனத்துக் கள்ளேயே விலைகளெல்லாம் திட்டம் செய்துவிட்