கற்புக்கரசி கமலாம்பாள் 235 டாள். அந்த ஊரிலேயே ஒரு சிறு வீட்டை வாங்கி விடுவதாய்த் தனக்குள் தீர்மானம் செய்து கொண்டு ஆற்றங்கரைக்குப் போகும்போது வரும்போதெல் லாம் ' இதுதான் நம்முடைய அகம்' என்று அதை அன்புடன் கூர்ந்து நோக்கி' ஏன், இந்த வீடு போதா மல் என்ன, கொல்லையிலே கீரைப்பாத்தி போடலாம், கறிகாய் விலைக்கு வாங்குகிறது என்றால் நமக்கு கட்டி வருமா? சுவரிருக்கிறது சாணம் தட்டலாம். வீடு கூட்டி கூட வேண்டாம், நாமே பெருக்கி மெழுகிக் கொள்ளலாம்' என்று இப்படி யெல்லாம் மனக் கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள். பர்த்தா வந்த வுடன் அவரை இறுகக் கட்டிக் கன்னம் வீங்க முத்த மிட்டு என் நகைகளை அவர் கையில் கழற்றிக் கொடுத்துவிடப் போகிறேன்' என்றும், 'சுண்ணாம்பு செங்கல்லால் கட்டிய வீடு போனால் போகிறது, என் அன்பாகிய பெரிய மாளிகையிலே அவரை நான் இருத்திக் கொள்ளுவேன்' என்றும் தன் மனதுக்குள் ளேயே பெருமை பாராட்டிக்கொண்டு மற்றவர்களி டத்தில் இதொன்றும் சொல்லாமல் ' ஸ்திரீ புருஷர்கள் அன்பாய் இருந்தால் அதற்கு சமானம் உலகத்தில் என்ன இருக்கிறது' என்று சொல்லிக் காலம் கழித் தாள். தாங்கள் அனுபவித்த சுகங்களை நினைத்து நினை த்து சந்தோஷப்பட்டு அதை யெல்லாம் மறுபடி எப் பொழுது அனுபவிக்கப் போகிறோம் என்று துக்கப் பட்டாள். வீட்டிலுள்ள சாமான்களை யெல்லாம் எங் கேயோ பயணம் போகக் கட்டிவைத்தாற் போல் ஒழுங்காய் - கட்டிவைத்துக் கொண்டாள். ஆருத்திரா தரிசனத்தன்று ' சுவாமி, என் பர்த்தாவை என்னிடம் க்ஷேமமாய்க்கொண்டு வந்து சேர்க்கவேண்டும்' என்று கண்ணும் கண்ணீருமாய் ஆழ்ந்த பக்தியுடன் வேண்டிக் கொண்டாள். அன்று பகலெல்லாம் 'காக்கை ஓயாமல் கத்துகிறது. அடுப்பு சீறுகிறது, அவர் நாளை வந்துவிடுவார்' என்று எல்லாரிடத்தி.