பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



238 கமலாம்பாள் சரித்திரம் யாசி ரூபமாக வந்தது போலவும், வந்து 'அடி பாவி, இந்தா இந்த மஞ்சளைப்பிடி. நான் ஆசிரமம் வாங்கிக் கொண்டாய்விட்டது. இனிமேல் இவ்வளவுதான் -உனக்கும் நமக்கும்' என்று சொல்லி வெகு இரக்க -மான பார்வையுடன் பார்த்துப் பிறகு மறைந் ததுபோலவும் அவளுக்குத் தோன்ற, அவள் உடனே கதறி விழிந்தெழுந்து விளக்கேற்றி 'ஐயையோ சந்நியாசியாகவே போய்விட்டீர்களா? நீர் ஆண்டி யானால் நான் ஆண்டிச்சி; உமக்கு ஊழியஞ் செய்து நாய்ப்போலப் பின் தொடர்ந்து வரமாட் டேனா ! என்னை அனாதையாய் விட்டுப்போவதும் தர்மமா' என்று புலம்ப, பக்கத்திலிருந்தவர்கள் ' என் னடிகமலாம்பாள், ஏனடி. அம்மா, என்ன கனாக்கண் டாய்? ஏன் புலம்புகிறாய்? பயப்படாதே, அழாமல் சொல்லு ,' என்று கேட்க, அவள் தான் கண்ட கனா வைச்சொல்லி இன்னும் அதிகமாக அழ, 'பயித்தியக் காரி, இப்படித்தான் அழுவார்களா? அதிசயமா யிருக்கிறது! கனாக்கண்டால் அதற்கென்ன இப்பொ முது! அன்றைக்கு அப்படித்தான் சேஷி அவள் அக முடையான் செத்துப்போய் விட்டதாகக் கனாக்கண் டாள். மறுநாளே அவன் பூதம்போலே எதிரே வந்து நிற்கவில்லையோ ; அதற்குக்கூட அவள் அழவில்லை யே; அடி பயித்தியக்காரி! நாளை வந்துவிடுவான் பார் உன் அகமுடையான் ; நான் சொன்னேன் என்று பாரேன்.' என்று ஆற்றினார்கள். கமலாம்பாள் விம்மி, விம்மி யழுதுகொண்டு வாயால் பானம் பண்ணப்பட்ட கண் ணீருடன் ' அவர் இனிமேல் இங்கே வருவார் என்று எனக்குத் தோன்ற வில்லை' என்று உடல் நடுங்கிச் சொல்ல, அவர்கள் ஏதோ தங்களுக்குத் தெரிந்த சமா தானங்களைச் சொல்லித் தேற்றினார்கள்.