பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



240 கமலாம்பாள் சரித்திரம் கொண்டு அடித்து இந்தத் துணியைச் சுற்று கழுத்திலே, தலையைச் சரை, பார்க்கிறாயா, என்ன பார்வை. ஐயோ என்னழகு துரையே , என்னைக் கெடுத்த ராஜாவே நான் கெட்டேனே, கொள்ளைக் குடுமியிருக்கிறது எனக்கு, நான் நிரம்ப அழகு எங்கள் அம்மாள் பொல்லாதவள், ராட்சஸி, அவள் வந்துவிடுவாள் உள்ளே போகலாம் வா' என்று பிதற்றி ' நான் உனக்கு ஒரு சங்கதி சொல்லுகிறேன் ஒருவரிடமும் சொல்லாதே' என்று கேட்க, வைத்திய நாதய்யர் ' ஓஹோ இவளுக்குச் சித்தம் ஸ்வாதீன மில்லை. அட்டா இப்படியா போகவேணும். கொஞ்ச நாளைக்கு முன்னேயே ஏதோ ஒரு மாதிரியாய் இருட் பதாகச் சொல்லிக்கொண்டார்களே, பயித்தியமே பிடித்துவிட்டதா' என்று பரிதபித்தார். - சுப்பிரமணியய்யர் சாகும் சமயத்தில் நடந்த விருத்தாந்தத்தை விஸ்தாரமாகச் சொன்னோம். அவர் நடுராத்திரியில் பொன்னம்மாள் கையைப் பிடித்துக் கொண்டு பல்லைக் கடித்து கண்கள் தீப்பறக்க 'சண் டாளி, ராட்சஸி என்று திட்டி அடிக்க வந்தது அவளு டைய ஞாபகத்தை விட்டு மறையவேயில்லை. அப் பொழுது அவள் நிரம்ப பயந்து போய்விட்டாள் தன் புருஷன் மரணத்துக்கு தான் காரணமானதால் தன்னைப் பிரமஹத்தி சுற்றும் என்ற பயமும், அன்று இராத்திரி அவர் விழித்த கோர விழி உண்டுபண்ணின பயமும் அவளுடைய சித்தத்தை நிலைகுலையச் செய் தது. எப்பொழுதும் அதே ஞாபகமாயிருந்ததால் அது அவள் மனதில் ஆழமாய்ப் பதிந்து கொண்டு அவளுக்கு உள்ள இயற்கை அறிவைத் துரத்தியது. பிறகு கமலாம்பாளுக்கு விரோதமாய் சங்கரியம்மாளும் சுட் பம்மாளும் சேர்ந்து செய்த துராலோசனைகளும், முத் துஸ்வாமியய்யரை ஊருக்கு வராதபடி செய்த செய் கையும், அவளுக்கு பாக்கியிருந்த சித்த ஸ்வாதீனத்