24 கமலாம்பாள் சரித்திரம் கரைக்குப் போயிருந்தார்கள். ஸ்திரீகளெல்லாம் வீட்டுக்குள் வேலையாயிருந்தார்கள். பொன்னம்மா ளைத் தடுக்க ஒருவருமில்லை. அவள் நேரே வைத்திய நாதய்யர் வீட்டுக்கு வந்து மேலே சொல்லியபடி பிதற்றினாள். வைத்தியநாதய்யருக்கு நெடுநாளாய்க் குழந்தை நடராஜனைப்பற்றி அவள் மேலே சந்தேக முண்டு. மேலும் தன் புருவமனை மருந்து கொடுத்து அவள் கொன்றுவிட்டாள் என்ற வதந்தி அவருடைய காதுக்கும் எட்டியிருந்தது. ஆகையால் தன்னுடைய முக்கிய சினேகிதரான முத்துஸ்வாமியய்யருடைய குடும்ப சரித்திரத்தை அறிய அதுதான் சமயமென் றெண்ணி, அவர் உள்ளே ஒருவரையும் விடவேண்டா மென்று கண்டிப்பான உத்தரவு கொடுத்து சேவகர் களை வாசலிலே நிறுத்திவிட்டு பொன்னம்மாளைத் தொடர்ந்து உள்ளே செல்ல, அவள் ' பாலிலே கலந் தால் தெரியாது. குடம் குடமாக வாயில் எடுத்து விட்டான் கட்டையிலே போவான், கரியாய்ப் போவான். பிசாசு விழிக்கிறாப்போல் விழியைப்பார், குத்து கண்ணை , இதோ இந்த வாழமட்டையைக் கொண்டு அடி. எங்கள் மைத்துனன் இன்னமே இங்கே வரமாட்டார். மொட்டைமுண்டை-,' என்று மறுபடியும் சரமாரியாக ஆரம்பிக்க, வைத்தியநாதய் யர் ' ஏன் முத்துஸ்வாமியய்யர் வரமாட்டார் என் கிறாய்? என்ன விசேஷம்? உனக்கென்ன மாய்த் தெரியும்?' என, ' போடா எனக்கா? கூடிப் பேசிப் பேசிக் குடியைக் கெடுத்தார்கள்; அதிலே நான் கிடை யாது. இல்லை, நிஜமாக நான் கிடையாது. தீட்சி தருக்கு 500 ரூபா, சுப்புவுக்கு 500 ரூபா கொடுக்க வேணும். ஆமாம் எனக்குத் தெரியாது, நான் மாட் டேன் என்று சொலலிவிட்டேன், ஐயையோ கண் ணைப்பார், குத்து. ஏது தெரியவில்லையோ, ஐயோ என் அழகு துரையே, என்னைக்கெடுத்த ராஜாவே , செத் துப்போய்விட்டாயே. நான் கொல்லவில்லை, கொல்ல -