ராவணன் சோகமும் லக்ஷ்மியின் அனுதாபமும் 245 அதைத் திறக்க இறந்துபோன இந்திரஜித்தைக் குறித்து ராவணன் பிரலாபிக்கும் கட்டம் வந்தது. அதை இருவருமாய் வாசிக்கத் தொடங்கினார்கள். ராவணேசுவரனுடைய கம்பீரத்தையும், அவனுடைய தீ நிகர் சீற்றத்தைக் கண்டு அருகேயிருந்த வானவர், மாதவர், அனைவரும் ஓடி ' யெங்கணும் சிந்தி யொளித்த ஓட்டத்தையும், பெருகுகாதலு மன்பும் பிறங்கிட, இருப்பதென்னும் எரி புரை கண்களும் உருகு செம்பென வோடிய தூற்று நீர்' என்றபடி அவன் தாரை தாரையாய் இருபது கண்களாலும் அழுத கண்ணீரையும் வர்ணித்திருக்கிற அட்சரலட்சம் பெறும்படியான பாடல்களை மனமுருகிப் பாடிப் பின்னர் கட்ட மானிடன் கொல்ல என் கரதலன் பட்டு ஒழிந்தனனே எனும் பன் முறை விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால், எழும் இருக்கும் இரைக்கும் இரக்கும் உற் றழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும்போய் விழும் விழிக்கும் முகிட்கும் தன் மேனியை உழும் நிலத்தை உருளும் புரளுமால். ஐயனே யெனுமோர் தலையானினஞ் செய்வனே யரசெனு மங்கோர் சிரம் கையனே யுனைக்காட்டிக் கொடுத்த நா னுய்வனே யென்றுரைக்கு மங்கோர் சிரம். என்று இவ்விதம் பலவாறாகப் பத்து வாயாலும் பிரலாபித்து படாதபாடெல்லாம் பட்டு 'விடம் பிறந்த கடலென வெதும்பி' அயற்றி, அயர்த்து, விழுந்து, உருண்டு , புரண்டு வாய்விட்டு ஓ! வென்று அலறி யழுத ராவணனுடைய நிலைமையைப்பற்றிப் படிக்கும் போது லட்சுமி, ராவணன் ராட்சதன் ஆனாலும் " அன்றவர்க்கடுத்த துன்னி மழைக்கணீர் அருவி சோர்வாள் என்றபடி ராமன் கரதூஷணர்களோடு செய்த யுத்தத்தில் கோடிக்கணக்காய் மாண்ட ராட்ச தர்களைக் குறித்து அழுத சீதையைப்போல அவனுக்