பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



246 கமலாம்பாள் சரித்திரம் கிரங்கியழ, குழந்தை நடராஜனைக் குறித்துத் தன் தகப்பனார் அழுத அழுகை திடீரென்று ஞாபகத் திற்கு வந்துவிட்டது. வரவும் ' இப்படித்தான் எங் கள் அப்பாவும் அழுதார்' 'ஐயோ நடராஜா!' என்று அலறி, ' அவன் எதிரே வந்து தவழ்ந்து விளையாடு கிறாற்போல இருக்கிறதே, ஐயோ, அவனைப் பார்க்க வேணும் என்று ஆசையாயிருக்கிறதே; எப்படிப் பார்ப்பேன்! இரண்டு வயதுக்கு உள்ளாக வாய்விட்டு மழலைச்சொல் சொல்ல ஆரம்பித்துவிட்டதே, போகிற குழந்தையல்லவோ ! இருக்கிற குழந்தையானால் அப்படி வராது. அது கையைக்காலை ஆட்டு கிறதையும், ஐயோ அதன் பெரிய அழகிய கண்களை யும் நான் எப்பொழுது காண்பேன்; ஒரு நிமிஷத்திலே போன இடம் தெரியாமல் போய்விட்டானே!' என்று அழ, ஸ்ரீநிவாசனுக்கும் அழுகை வந்து விட்டது. இரண்டு பேருமாகச் சேர்ந்து விம்மி, விம்மியழுது பிறகு அயர்ந்து நித்திரை போனார்கள். இரண்டுமணி சுமாருக்கு அவர்களுடைய வீட்டுக் கதவை யாரோ வந்து பலமாய்த் தட்டினான். தட்டவே ஸ்ரீநிவாசன் திடுக்கிட்டு விழுத்து வெளியே வர, வந்த மனிதன் அவன் கையில் ஒரு அவசரத் தந்தியைக் கொடுத் தான். ஸ்ரீநிவாசன் அதைக் கையில் வாங்கி, நெஞ்சும் மார்பும் படீர் படீர் என்று அடிக்க, விளக்கேற்றி அதை உடைத்துப்பார்த்தான். அதில் முத்துஸ்வாமி யய்யரைக் காணோம், உடனே லட்சுமி சஹிதம் புறப்: பட்டு வரவும் ' என்று எழுதியிருந்தது.