பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆற்று வெள்ளமும் அலங்கோலக் காக்ஷியும் 251 - - - நக்ஷத்திரமெல்லாம் இந்தப் பரிதாபத்தைப் பார்க்க மாட்டாமலோ ஏதோ, போன இடம் தெரியாமல் ஓடி யொளித்தன. ஏரி, குளங்களெல்லாம் உடைய, அவற் றின் ஜலத்தையுங் கூடக் கொள்ளை கொண்ட நதி, மலைப்பாம்புகள், குறவர் குடிசைகள், செத்த பிணங் கள், விழுந்த மரங்கள், மடிந்த மாடுகள் கன்றுகள், இவைகளை யெல்லாம் வாரியடித்துக் கொண்டு சில விடங்களில் ஹோ வென்று கூப்பிட்டும், சில விடங் களில் ஹம் என்று அடங்கியும் 'தூக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே வாக்கு தேன் நுகர்மாக்களை மானுமே' என்றபடி சுய ஞாபகமற்று அறிவை யிழந்து அங்கங்கள் துவண்டுவரும் கட்குடியனைப் போலத் தள்ளாடியும், விரைந்தோடியும், கூவிப்பாடி யும், ஆடியசைந்தும், களியாட்டக் கோலாகலத்து டன் சஞ்சரித்து தான் அடித்த கொள்ளை போதா தென்று தனக்குமேல் போடப்பட்ட பாலத்தைப் பொறாமல் அதிற்பாய்ந்து அதை உடைத்துத்தகர்த்து நூற்றுக்கணக்கான ஜனங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது. குழந்தை உருண்டு முழுகுவதைக்கண்ட ஒருதாய் தானும் கூடவே முழுகினாள். ஸ்திரீ முழுகு வதைக்கண்ட புருஷன் அவளைப்பிடித்து இழுக்க எத் தனித்துத் தன் உயிரையும் அவளுடைய உயிரோடு உயர அனுப்பினான். மாமனாரகம் போய் வந்த மாப் பிள்ளைச் சிறுவர்கள் எத்தனையோ ; நூதனமாய் புதுமணம் புரிந்த புருஷர் எத்தனையோ ; பெரியோரி ருக்க அவர் கண் முன் தாமிறந்த சிறியோர் எத்த னையோ : இன்று வருவார் நாளை வருவார் என்று 'நாளெண்ணித் தேய்ந்த விரலுடன் காலமதைக் கழிக்கும் நாயகிகளிருக்க அங்கு ஒன்றும் உரையாதி றந்த நாயகரெத்தனையோ ; ஒருதாய்க்கொருமகனாயி ருந்த பாலர்களெத்தனையோ ; கர்ப்பஞ்சுமந்த காதலி கள் தான் எத்தனையோ ; இவ்வித பரிதாபங்கள் நிறைந்து ஜனங்கள் முழுகினோரும், முழுக இருப்