பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அம்மையப்பபிள்ளையின் சங்கீதஞானம் 255 ஆத்மா. சந்தனம், புஷ்பம், பாட்டு இவை இல்லாத நாள் கிடையாது. ஆடல் பாடலிலேயே அவருடைய ஆயுசு முழுவதும் சென்றது. இந்த நித்திய கல்யாண புருஷர் சாகும் சமயத்தில் தன் தாசியின் மடியில் தலை வைத்து அவளுடைய வீணாகானத்தைக் கேட்டுக் கொண்டே பரலோகம் சென்றார். அவர் ஒருநாள் தன் தாசி தெய்வயானை வீட்டில் உட்கார்ந்து அவளைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவள் ஜாவளி, க்ஷேத்திரிய பதம் எல்லாம் பாடிவிட்டுத் தான் நூதன மாக மெட்டு அமைத்து வைத்திருந்த சில நைஷதப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது அம்மையப்பர் பிள்ளை சம்பாத்தியத்தின் நிமித்தமாக ஆடுசாபட் டியை விட்டு வெளியேறி சிறு குளத்துக்கு வந்திருந் தார். அவர் அப்பொழுதே கொஞ்சம் தமிழ் பார்த் திருந்தார். ரங்கசாமி அய்யரும் தெய்வயானையும் மேற்செல்லிய அவசரத்திலிருந்தபோது அம்மையப்ப பிள்ளை தற்செயலாய் அந்த வீதி வழி சென்றார். அன்று ராத்திரி அவருக்கு சோறு கிடையாததால் ஸ்தல உபவாசம். தமிழ்ப் பாடல்கள் அவருடைய காதில் படவே,

  • செவிக்குணவில்லாத போழ்து சிறிது

வயிற்றிற்கு மீயப் படும். என்ற குறளை மனதில் நினைத்துக்கொண்டு தெய்வ யானை வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார். சங்கீதத்தில் அவருக்கு நிரம்ப ஞானம்! பல்லவி பாடினால், ' மேலே பாட்டுத் தெரியாதோ, திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லுகிறான்' என்று நினைப்பார். 'பாட்டில் இத்தனை சேஷ்டை எதற்கு. நேராக உள்ளபடி சொல்லிவிட்டால் நான் கேட்டுப் போகமாட்டேனோ' என்று தனக்குள்ளேயே சொல்