பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



258 கமலாம்பாள் சரித்திரம் னும் இலக்கணமாய்க் கூவியழ, ரங்கசாமி அய்யர் 'இது யார், இவன் தொழிலில் திருடனாயிருக்கிறான். பேச் சில் புலவனாயிருக்கிறான் ' என்று கூட்டத்தை விலக் கிக் குற்றுயிராயிருந்த அம்மையப்பப்பிள்ளையிடம்வர, அவர் அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு நான் ஆடுசாபட்டி வித்துவான் அம்மையப்ப பிள்ளை. பாடல் கேட்பான் வந்தேன், திருடுவான் வந்தேன் அல் -லேன்' என்று சொல்ல, அவர் அவரைக் கூர்ந்து பார்த்து இவன் திருட வந்தவனல்லவென்று தோற்றத்தால் ஊகித்து இப்பொழுது விட்டுவிடுங்கள். காலமே பார்த் துக்கொள்வோம்' என்று சொல்லி அவரை பத்திர மாய் ஒரு அறையில் போட்டுப் பூட்டி விடும்படி உத் தரவு செய்தார். அப்படியே அவர்களும் சம்மதித்து தெய்வயானை வீட்டிலேயே ஒரு அறையுள் அவரைப் பூட்டிவைத்தார்கள். காலையில் எழுந்து ரங்கசாமி அய்யர் அறையைத் திறந்து பார்க்க, பட்ட அடியில் நன்றாய்த் தூங்கி அப்பொழுது தான் விழித்த அம்மையப்பபிள்ளை அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தன் விர்த்தாந்தத்தை உள்ளபடி சொல்லியழ, அவர் இந்த மனிதன் ஒரு கற்றறி மூடன், ஒன்றும் தெரி யாத அப்பாவி ,' என்று அறிந்து ராத்திரி அவர் பட்ட அவஸ்தையைக்குறித்து துக்கித்து அன்று முதல் அவ ரைத் தன் சம்ரட்சணையிலேயே வைத்துக்கொண் டார். அவருடன் பழகப்பழக அவருடைய மாதிரி ரங்கசாமி அய்யருக்கு நிரம்பப் பிடித்தது. அவருக்கு தெய்வயானை வயிற்றிற்பிறந்த பெண் ஒன்று இருந் தது. அதற்கு ஜானகியென்று பெயர். அதை வேசித் தொழிலில்விட அவருக்கு சம்மதமில்லை. யாராவது ஒரு ஏழைக்குக் கொடுத்து அவனை சம் ரட்சணை செய்யவேண்டுமென்று அவருக்கு நெடு நாளாய் எண்ணம் உண்டு. அம்மையப்பபிள்ளையி னுடைய குணம் அவருக்கு நிரம்பப் பிடித்திருந்ததால் அந்தப் பெண்ணை அவருக்கே கன்னிகாதானம் செய்து