பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



260 கமலாம்பாள் சரித்திரம் பார்க்கப்பட்ட அந்த ரயிலில் ஸ்ரீநிவாசனைக்காணோம் மறுபடி இரண்டு மூன்று ரயிலுக்கு வந்து வந்து ஸ்ரீநிவாசனை அம்மையப்பபிள்ளை தேடினார். அவன் வரவில்லை. இதற்குள் சிதம்பரம் ஊர் முழுவதும் வீடு வீடாக நுழைந்து முத்துஸ்வாமியய்யரைத் தேடினார் கள். அவரைப்பற்றி யாதொரு துப்பும் கிடைக்க வில்லை. மூன்று நாள் இப்படித் தேடியான பிறகு கடைசியாய் ஒரு தீட்சிதர் முத்துஸ்வாமியய்யருடைய லட்சணங்களைக் கேட்டவுடன் அந்தமாதிரி ஒருவர் தன் அகத்திலேயே தங்கியிருந்ததாகவும், அவர் சீக்கிரத்தில் சம்சார சகிதமாகக் காசிக்குப் போகப் போகிறதாய்ச் சொன்னதாகவும் தெரிவித்தார். அவர் சொன்ன ஆள் அடையாளங்கள், பேச்சு, நடை முத லிய யாவும் பொருந்தியிருந்தன. அவர் ஊரும் ஏதோ ஒரு 'குளம்' என்று சொன்னதாகவும் சொன்னார். இந்தத்துப்பை வைத்துக்கொண்டு அவர் காசிக்குத் தான் போயிருக்கவேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆனால் இவர்கள் வடக்கே போவதா தெற்கே போவதா என்று தீர்மானிக்க சுலபத்தில் கூடவில்லை. ஸ்ரீநிவாசனைக் காணோம் என்று லட்சுமி புழுவாய்த் துடிக்கிறாள். காற்று மூலமாகவாவது அவனுடைய க்ஷேமசமாசாரம் தெரிந்தால் போதுமென்றாய் விட் டது. ஸ்ரீநிவாசனையே தேடுவதா அல்லது முத்துஸ் வாமி அய்யரைத் தேடுவதா என்று அவர்களுக்குள் ஸ்திரப்படவில்லை. கடைசியாக ஸ்ரீநிவாசன் அவர் களைத் தேடிக்கொண்டு சிதம்பரத்துக்குத்தான் வரு வான் என்று ஊகித்து அப்படி வரும்பட்சத்தில் அவர் கள் காசிக்குப் போயிருக்கும் செய்தியை அவனுக்குத் தெரிவிக்க அவன் பேருக்கு அவ்வூர் தபாலாபீசில் ஒரு காகிதமும் முக்கியமான ஒவ்வொரு தீட்சதரிடத்தும் ஒரு காகிதமும் கொடுத்துவிட்டு நடராஜா சந்நிதியில் போய் விழுந்து முறையிட்டுக் காசியை நோக்கிப் பறப்பட்டார்கள்.