பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



30 ' கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழுந்தேனாகி. இதுநிற்க, முன்னே முத்துஸ்வாமியய்யரும் அவ ருக்கு குருவாய் வந்துதவிய சச்சிதானந்த ஸ்வாமிக ளும் நடுராத்திரியில் தனிவழி சென்றார்களே, அவர் களுடைய நிலைமையைப் பற்றிச் சிறிது விசாரிட் போம். முத்துஸ்வாமி அய்யர் சுவாமிகளை நிழல் போலப் பின்பற்றிச் சென்றார். இவ்விருவரும் சிதம் பரத்தின் கடைசி எல்லையைத் தாண்டுந்தருணத்தில் சுவாமிகள் திடீரென்று பின் திரும்பி 'அதோ அந்தக் கோபுரத்தைப் பார், அது தரையிற் கிளம்பி உயரச் சென்று உம்பருலகுடன் உறவாடி நிலையாய் நிற்பது போல் உன் உள்ளமும் மேல்நோக்கி மயங்காது நிற்கும் படி கடவுள் உனக்கு அருள் செய்வார். அப்படி அருள் செய்யும்படி பிரார்த்தனை செய்து அந்தக் கோபுரத்தைக் கடவுள் மூர்த்தமாக பாவித்துச் சேவை செய்,' என்று ஆக்ஞாபிக்க, முத்துஸ்வாமி 'அய்யரும் ' சுவாமி, உன் மகிமை அளவிடப்படாதது, மனோவாக்குக்கு எட்டாமலும், தட்டாமலும் நின்ற பொருள் நீ ஒருவனே. உன் ஸ்வரூபமாய் இவ்வுலகை ஆதரித்தடக்கும் இவ்வாகாயமும் அதில் நீ இட்ட தைச் செய்து சஞ்சரிக்கும் நட்சத்திரக் கூட்டமாகிய அகிலாண்டகோடிகளும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத் தில் நான் ஒரு ஏழை, பஞ்சை , அனாதை, நாயினும் மனிதனுடைய சின்மய ஸ்வரூபத்திலும் ஞானானந்த வல்லமையிலும் நம்பிக்கையற்றவர்க்கு இவ்வத்தியாயம் ருசிக்காது ; கதையை மட்டும் கவனிப்பவருக்கு இது அத்தி யாவசியமுமன்று.