பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



264 கமலாம்பாள் சரித்திரம் " ஊராரு மறியாம லொளிகண்டு பிசகாமல் ஈராறு கண்கொண்டு எழும்பிய மண்டபம் காணாத கண்ணென்ன கண்ணோ என்று சொல்லி உபநிஷத்தின் உட்கருத்தை உள்ள டக்கி அமைத்த ஆலயத்தையும் அதற்குள் சிருஷ் டிக்கு முன்னும் பின்னும் ஒடுங்காத கடவுளின் ஆனந்த நிலைமையையும், ஆகாசரூபத்தையும், ஆனந் தத்தாண்டவத்தையும் ஒருமித்து உருவகம் செய்திருக் கும் சபாபதியையும் ரஹசிய வெளியையும் அவற் றிற்குப் பின்னுள்ள திருமூலர்மந்திரத்தையும் எண்ணி சுவாமிகள் ஞானானந்தப் புலம்பல் புலம்பிச் செல்ல, அவர் பின்னே முத்துஸ்வாமி அய்யரும் சூரியனுடைய பிரதிபிம்பத்தைத் தன்னுள் பெற்று பனித்துளியா னது மகிழ்ந்து விளங்குவது போல் மகிழ்ந்து சென் றார். இவ்வாறு இவர்கள் வழி நடந்து திருவொற்றி யூரை அடைந்து அவ்விடத்திலுள்ள பட்டணத்தார் சமாதியை அடைந்து அங்கே தங்கி யிருந்தார்கள். அவ்வாறு தங்கியிருக்கும்பொழுது ஒருநாள் பிரபஞ்ச முழுவதும் தன்னுடைய குலாசார கர்மானுஷ்டானங் களை முடித்துக் கடவுளுக்கு வந்தனமளித்துத் தியா னம் செய்யும் சாயங்கால சமயத்தில் ஞான தவபவ சுவரூபராகிய சச்சிதானந்த சுவாமிகள் மூலலிங்கத் தைத் தழுவிக்கொண்டு யோக நித்திரையிலிருந்தார். அப்பொழுது முத்துஸ்வாமியய்யரும் சுவாமிகளுடைய மற்ற சிஷ்யர்கள் சிலருமாக சமாதிக்கு வெளிப்புறத் திலுள்ள கிணற்றோரத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

  • அடியில் விஸ்தரிக்கப்படும் மோனானந்த நிலை சொந்த மாய் அனுபவித்தாருக்கன்றி மற்றோருக்குத் தெளிவாய் விளகாதெனப் பெரியோர் கூறுவர். ஆயினும் அதை 'வெறுங்கதை' யென்று ஒருவரும் நிராகரிக்க மாட்டார் களென்று நம்புகிறேன்.