பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



266 கமலாம்பாள் சரித்திரம் விளையாடுகிறார்."சரமெறிந்த பல்குனற்கு சரமீந்தான்." அதாவது அர்ச்சுனனை வலியச் சண்டைக்கிழுத்து அவனோடு கைகலந்து சண்டை போட்டல்லவோ சுவாமி அவனுக்குப் பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அதுபோல நம்மைச் சோதனை செய்வதில் அவருக்கு வெகு திருப்தி. நாம் எல்லாம் அவருக்குக் குழைந்தை கள். நம்மைத் துரத்தி ஓடியும், நாம் துரத்த ஓடியும், நம்முடன் கொஞ்சிக் குலாவியும், அடித்துக் கிள்ளியும் , தாலாட்டியும், ஏமாற்றியும், மாற்றி மாற்றி அழப் பண்ணுவதும் சிரிக்கச் செய்வதுமே அவருக்குத் தொழிலாய்விட்டது. நமக்கு விளையாடக் கொடுத் திருக்கிற சாமான்களைத்தான் பாருங்கள். மரங்கள், நதிகள், நட்சத்திரங்கள், மேகங்கள், ஆகாயம். " நமக்கு என்ன குறைவு! இவைகளை நாம் அனுபவிக்கா விட் டால் அது நம்முடைய குற்றம்" - என்று உற்சாகத் துடன் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று பெரிய விஷயங்களைப் பேச ஒரு ஆசையும் கட்டுக் கடங்காத ஒரு குதூகலமும் உண்டாயிற்று. அவர் ஆகாயம், காற்று, மேகம், கடவுள் இவற்றையெல்லாம் பற்றிப் பேசியும் அவருடைய உள்ளத்தின் ஆரவாரக் கொதிப்பு அடங்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் அவருக்கு அசாத்தியமான பரபரப்பு இருந்தது. பிர மாதமான மனப்பசி ஒன்று உண்டாயிற்று. இப்படிச் சில நிமிஷங்கள் கழிந்தபிறகு அப் பரபரப்பு முற்று மடங்கி ஓர்வித ஆனந்தம் அவருக்கு ஜனித்தது. நிஷ் காரணமான குதூகலம் ஒன்று அவருள்ளத்தில் பிறக்க அவருக்குக் கண் மூடிவிட்டது. பேச்சு ஒழிந்து மௌனம் குடிகொண்டது. மனதில் தான் அனுபவிக் கும் எண்ணம் ஒன்று தவிர மற்ற நினைப்பனைத்தும் இறந்தது. வெளியில் பார்க்கப்படும் பொருள்களெல் லாம் கொஞ்சமும் மனதில் பதியவே இல்லை. அவர் ஏதோ வெளியில் கலந்து ஒன்றுபட்டாற்போல அவ ருடைய மனம் அகண்டாகாரமான விரிவை யடைந்