கள்ளப் பண்டாரம் 269 ராம். தொண்டு கிழவராம். நிரம்ப சாந்தமுள்ளவராம். அவர் பெயர் என்னவோ ஒரு ' ஆனந்த சுவாமிகள்' என்று வரும் - ஆமாம் சரிதான். சச்சிதானந்த சுவாமி கள். அவரைப்போய்க் கண்டால் உன் துக்கம் இந்த க்ஷணத்திலேயே நிவர்த்தியாகிறது அம்மா. ஆனால் அவர் இப்போது அங்கேதான் இருக்கிறாரோ என் னவோ. முதலிலே யாரையாவது போய்ப் பார்த்துக் கொண்டு வரச்சொன்னால் அப்புறம் நீங்கள் எல்லோ ரும் போகலாம்' என்று சொல்ல, கமலாம்பாள் 'அம்மா பெரிய உபகாரம் செய்தீர்கள். இந்த உதவி யார் செய்வார்கள். இந்தக் காலத்தில் ஏதோ எங்கள் நிலைமையைக் கண்டு இரக்கப்பட்டு இவ்வளவு நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் என்ன உப காரம் செய்யப்போகிறேன்' என்று உபசாரம் சொல்லிவிட்டு, அம்மையப்பபிள்ளை வந்தவுடன் அவ ருக்குத் தெரிவிக்க, ' அவர் இதோ நான் போய்ப் பார்த்து வருகிறேன்' என்று புறப்பட்டார். பிள்ளையவர்கள் திருவொற்றியூரையடைந்து பட் டணத்தார் கோயிலுக்கு வழி விசாரித்துக் கொண்டி ருந்தார். ஆய்விட்டது, கால்மணி சென்றால் கமலாம்பா ளுடைய கவலை ஒழியும். அம்மையப்பபிள்ளை தீவிரமாக வந்துகொண்டிருக்கிறார். அவ்வாறு வரும் வழியில் பண்டாரம் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவர் அவ னைப் பட்டணத்தார் கோயிலுக்கு வழிகேட்க, அவன் அவர் மடியிலிருந்த பணப்பையைப்பார்த்து அவரைப் 'புதுக்கோழி' விசாரிக்க ஆவல் கொண்டு எழுந் திருந்து அவரைச்சேவித்து ' சுவாமி அடியேன் இட் டுப்போகிறேன் வாருங்கள். இந்த நாய் இன்றைக்கு நல்ல பூஜை பண்ணிற்று. தங்களைப்போல பெரியவர் கள் சேவை எனக்குக் கிடைத்தது. சுவாமி ஏதோ தங்களிடம் வசிய சக்தி இருக்கிறது. ' ஊசியைக் காந் தம் இழுக்கிறது' போல் என்னை இழுக்கிறது ' என்று ஸ்தோத்திரம் செய்தான். வாஸ்தவத்திலேயே அவரி