பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ரீநிவாசனின் சோகம் 277 கவலைப்பட்டான். 'ஐயோ அவளை எலும்பும் தோலு மாகவாவது நான் காண்பேனோ தெய்வமே. முன்னே நாலு நாள் அவளைவிட்டுப் பிரிந்து நான் காஞ்சிபுரம் போய் வருவதற்குள் அவள் உடம்பு அரையுடம்பா யிருந்ததே. ஐயோ இப்பொழுது என்ன செய்கிறா ளோ' என்று பெருமூச்செறிந்தான். 'ஏது அவள் உயிரை வைத்துக் கொண்டிருப்பாள் என்று தோன்ற வில்லை. எனக்காவது அவளை விட்டுப் பிரிந்த ஒரு துன் பம். அவளுக்குத் தகப்பனார், தம்பி, போதாக் குறைக்கு நான், எங்கள் மூன்று பேரையும் விட்டுப் பிரிந்த துன்பம். அத்துன்பத்துடன் அவள் உயிர் தரிக்கவா!' என்று கண்ணீர் பெருக்கினான் நான் இவ் விதமாகப் போனேன், வந்தேன்' இவ்விடத்திலிருக்கி றேன், என்று கூட அவளுக்குச் சொல்வாரில்லையே. அவள் தான் எங்கேயிருக்கிறாளோ, சிதம்பரத்துக்கே போனாளோ. அல்லது மறுபடி - சிறுகுளத்துக்கே போனாளோ, தகப்பனாரைத்தான் கண்டாளோ, அதுவு மில்லையோ. எந்தக்காடோ, செடியோ, யார் கையிலோ எங்கே தவிக்கிறாளோ' என்று உருகினான். ' இதே தருணத்தில், இதே நிலவில், அவளும் என்னை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தாலுமிருக்கலாம். அப்படியிருந்து மென்ன; இந்தச் சந்திரன் நமக்காக சாட்சி சொல்லப் போகிறதா? அன்னத்தைத் தூதுவிட்டதும், மேகத் தைத் தூதுவிட்டதும் கைக்கெட்டாத கதையாயிருக் கிறதே!' என்று கண்ணீர்விட்டான். ' ஐயோ நாங்கள் சேர்ந்திருந்த காலத்தில் இந்த மாதிரி நிலவைக் கண்டு விட்டால் என்ன பாடு படமாட்டாள். அன்றைக்கு சமுத்திரக்கரையிலே சந்திரன் "கலந்தவர்க் கினிய தோர் கள்ளாய்' இருக்கிறது என்று பாடினாளே ; இப்பொழுது "பிரிந்தவர்க்கு உயிர்சுடு விஷமுமாய் " என்று அடுத்த வரியைப்பாடி யழுகிறாளோ!' என்று தானுமழுதான். ' இந்த மேகங்கள் ஒன்றோடொன்று பேதமில்லாமல் கலப்பதுபோல் நம்மிருவர் மனமும்