பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உண்மை உருட்டுக் கஞ்சாது 281 கரய்யருடைய மகனெனவே சிறைசெய்து விசாரணை யிலிட்டார்கள்.' ஸ்ரீநிவாசன் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு குற்ற மறியாத மனதானதால் கொஞ்ச மும் கலங்காமல் சிங்கக்குட்டி போல் நின்று கம்பீர மாய்க் கேட்ட கேள்விகளுக்குப்பதிலளித்தான். வக்கீல் துரை.- உன் பெயரென்ன? ஸ்ரீநிவாசன். - ஸ்ரீநிவாசன். வக்கீல். - உண்மையான பெயர்? ஸ்ரீநிவாசன். - ஸ்ரீநிவாசன். வக்கீல்.- ஒளியாமல் சொல்லு! ஸ்ரீநிவாசன். - ஸ்ரீநிவாசன். வக்கீல். - வெங்கட்டராமன் என்று உனக்கு ஒரு பெயருண்டா ? ஸ்ரீநிவாசன். - அப்படி எனக்கு இதுவரையில் ஒருவரும் பெயரிடவில்லை. வக்கீல். - உன் தகப்பனார் பெயர்? ஸ்ரீநிவாசன்.-- நாராயண அய்யர். வக்கீல்.--அவர் உத்தியோகம்? ஸ்ரீநிவாசன். - தாசில். வக்கீல். - நீ திவான் சங்கரய்யர் மகனல்லவா? ஸ்ரீநிவாசன். - அவ்வளவு பெரிய பாக்கியத்தை நான் அடையவில்லை. வக்கீல். - நீ அவர் மகனைப்போலவே இருக் கிறாயே! | ஸ்ரீநிவாசன். - அதுவும் என் குற்றமா! வக்கீல்.- நீ நல்ல பால்யம் ; நிரம்ப லட்சணமா யிருக்கிறாய் - ஸ்ரீநிவாசன்.--அது என் குற்றமல்லவே! வக்கீல்.- நான் சொல்லுவதைக் கேள்; அவ்வளவு வயதையும் லட்சணத்தையும் வீண்போக்காதே! ஸ்ரீ நிவாசன். - வீண்போக்கவில்லை. எனக்கு தக்கபடி கல்யாணம் ஆயிருக்கிறது. வக்கீல். - நான் சொல்வதைக் கேள்! நீ சங்கரய்