பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



282 கமலாம்பாள் சரித்திரம் யர் மகன் போலவேயிருக்கிறாய், குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடு. ஸ்ரீநிவாசன்,- சங்கரய்யர் மகனைப்போல் இருக் கிற குற்றத்தை நான் வேணுமென்று செய்யவில்லை. வக்கீல். - நீ உண்மையை ஒப்புக்கொண்டுவிடு! ஸ்ரீனிவாசன். - தங்களுடைய ஆத்திரத்திற்காக பொய்சொல்ல எனக்குச் சம்மதமில்லை. வக்கீல் துரையவர்களுடைய, கேள்விகளுக்குத் திருப்தியான உத்தரம் அவருக்குக் கிடைக்காததால் சாட்சிகளை யழைத்து இந்த மனிதன் சங்கரய்யர் மகன் தானா அல்லவா என்று விசாரித்தார்கள். ஸ்ரீநி வாசனைச் சிறைபிடித்து வந்தவர்கள் ஆமென்றும், மற்றவர்கள் அல்லவென்றும், பின்னும் சிலர் சந் தேகமாயிருக்கிறது என்றும், சரீரப் பரீட்சையின்மேல் அபிப்பிராயம் கொடுத்தார்கள். பிறகு ஸ்ரீநிவாசன் தன் தரப்பு சாட்சிகளாகத் தன்னுடைய ' டையரி' புஸ்தகம், தன் கையிலிருந்த சில கடிதங்கள் இவை களை ஆஜர் செய்தான். நியாயாதிபதிகள் அவைகளைப் பரிசோதனை செய்துகொண்டு ஸ்ரீநிவாசன் குற்றவாளி யல்லவென்று தீர்ப்புச்செய்தார்கள். ஸ்ரீநிவாசன் ' தன் தாயார், தகப்பனாருக்குத்தான் பிறந்தவன் என்ற செய் தியைக் கோர்ட்டு முன்பாக ருசுப்படுத்தினவன் நான் ஒருவன் தான் உலகத்தில். அதைத்தாங்கள் ஒப்புக் கொண்டதற்காக வந்தனமளிக்கிறேன்' என்று சொல்ல, கோர்ட்டார் அவனுடைய மனோ தைரியத் தையும் பெருந்தன்மையையும் மெச்சி இதுவரையில் சிறையில் வைத்ததற்காகவும், மான நஷ்டத்திற்காக வும் இதர நஷ்டத்திற்காகவும் பதினாயிரம் ரூபாய் சர்க் காரிலிருந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.