பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



33) கமலாம்பாள் கண்ட அதிசயக்கனவு அம்மையப்பப்பிள்ளைமுதலானவர்கள் திருவொற்றி யூரைவிட்டுக் காசியை நோக்கியே புறப்பட்டுவிட்டார் கள். கமலாம்பாள் தான் முன்னிருந்த நிலைமையையும், தன் கணவர் நிரபராதியான தன்னைவிட்டுப் பிரிந் ததையும் நினைத்து பின்வருமாறு துக்கிக்கிறாள். 'இவ் வுலகில் கடவுள் ஒருவரை நம்பலாமேயன்றி மனிதரில் யாரையும் நம்பக்கூடாது, எவ்வளவு உத்தமமான மனிதனானாலென்ன! அவனும் கடவுளுடைய ஆக் ஞைக்கு உட்பட்டவன் தானே. கடவுளுடைய கிருபை இருந்தால் நமக்கு ஒரு குறைவும் வராது. ஏதோ நாம் செய்த பாவம் அனுபவிக்கிறோம். பகவானுடைய சங்கல்பம். அப்படியிருக்குமானால் அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன? புருஷனைத் தியானித்து வருந்துவதைக் காட்டிலும் கடவுளைத் தியானித்தாலா வது பயனுண்டு. மற்ற ஸ்திரீகள் அனுபவியாதபடி நாம் சுகம் அனுபவித்தோமே, அது போதாதா? ஆசைக்கு அளவில்லையென்பது சரியாகத்தான் இருக் கிறது. மேலும் இந்தத் துன்பமே கடவுளைப்பற்றி நினைக்கச் செய்வதினால் நமக்கு ஒரு பெரிய அனுகூல மாக இருக்கிறது. வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும், சிங்கி குளிர்ந்தும் கொல்லும் " என்றது போல மனிதன் அனுபவிக்கிற சுகமெல்லாம் அவனுக்கே ஹிதசத்துருவாயும், துக்கமெல்லாம் உண்மையான நன்மையாகவும் இருக்கிறது. வாழ்வு வந்துவிட்டால் மனிதனுக்கு உள்ள கண், காது எல்லாம் அடைத்துப் போகிறது. நான், நான் என்று 'சர்வம் அஹம்மயம் ஜகத்' என்றபடி உலகமெல்லாம் நானாகவே நிறைந்