பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



284 கமலாம்பாள் சரித்திரம் திருக்க, பெரியோர் சிறியோர் கடவுள் ஒருவருமே இல்லாமற் போய்விடுகிறது. துன்பம் வந்தாலோ எவ் வளவு கேவலமான மனிதனானாலும் கடவுளைப்பற்றி ஒரு க்ஷணமாவது நினைக்கிறான். "மரண காலத்தில் என்னைத் தியானித்தவனுக்குக்கூட நான் மோக்ஷம் கொடுக்கிறேன் என்று வாக்களித்திருக்கும் எளி யார்க் கெளியானாகிய பகவான் துன்பம் வந்தகாலத்து நினைப்பவர்களுக்கு ஈடுபடமாட்டானா! 'பகவானே, உன் இஷ்டப்படி நடத்து ; நான் ஒன்றும் முணு முணுப்பதில்லை. உன்னையன்றி யிவ்வுலகில் ஒரு துணை யும் காணேன். இன்பமானாலும், துன்பமானாலும் கொடுக்கிறவன் நீ என்பதை நினைத்தால் எனக்கு ஆனந்தமாயிருக்கிறது' - என்றிவ்வாறு தன் மனதில் எண்ணியெண்ணிக் கணவனைப்பற்றிக் கவலைப்படு வதைவிட்டு பர்த்தாமீது வைத்திருந்த பக்தியையும், அன்பையும் உருக்கத்தையும் மெள்ள மெள்ள பக வான்மீது கமலாம்பாள் வைக்கத் தொடங்கினாள். ராம், ராம், ராம் என்று ராமநாம ஸ்மரணை செய்யத் தொடங்கினாள். ' சாக்ஷாத் ஸ்ரீராமனே சீதையை விட் டுப் பிரிந்து வருந்தினானே. அவன் காட்டின மாயை யிலகப்பட்டுப் புழுவினுங் கேடான நான் புருஷனை விட் டுப் பிரிந்து வருந்துகிறதும் ஓர் அதிசயமா' எனச் சிரிப்பாள் ஒரு சமயம். 'புருஷனேன் , பெண்டேன், பிள்ளையேன், குட்டியேன்! நீ ஒருவன் இருக்க உன்னி லும் பெரியவராய் ஒருவரை மதிக்கவும் கூடுமோ? நீ நிறைந்த உலகத்தில் எதுவும் இல்லையென்று குறை படுவதும் எங்கள் பாவமன்றோ!' என்று எண்ணுவாள் ஒரு சமயம். 'நீ இருப்பது மெய்; நான் இருப்பது பொய். உன் இச்சை வெல்லுமோ, என் இச்சை வெல்லுமோ? உன் திருவுளப்படியே நடத்து ; உன்னிடத்தில் இன் னதுதான் கேட்பதென்றுகூட நான் அறியேன் ; எனக்கு எது நன்மையென்று உன் திருவுளத்திற்குத் தோன்றுகிறதோ அது எனக்கு சித்திக்கட்டும்' என்று