18 கமலாம்பாள் சரித்திரம் தில் நல்லவர்களுக்கென்ன பஞ்சமா! அதுவும் இப் பொழுது வரமாட்டார். வந்தாலும் அதிகமாக முன் போல் பேசமாட்டார். மனிதர்களுக்குள்ள நல்ல புத்தி இல்லாவிட்டாலும் அவர்களுக்குள்ள அச்சம் சுலபத் தில் போகிறேன் என்கிறதா?' சுப்பு : ' அதென்ன? அப்படி. என்ன வந்துவிட்ட டது, ஓஹோ! அவர்தானோ லட்சுமியை மதுரையிலே கொடுக்கக் காரணம், - என்னடி! இப்படித்தான் செய்யலாமோ? நீயும் உன் ஓர்ப்படியாளும் இருக்கிற நேசத்திற்கு சிவனே என்று உன் தம்பி பிள்ளைக்குக் கொடுத்து விடலாம். அவர்களுக்கென்ன, ஸ்திதியில் லையா, மதியில்லையா.' பொன்னம்மாள் : 'அவர்களுக்கேது ஸ்திதியும் மதி யும். இவர்கள் வீட்டு வாசலிலேதான் இராப்பகலாகச் சோற்றுக்குக் காத்திருக்கிறார்கள். அவர்கள் வீடுகளி லெல்லாம் இவர்கள் ஏற்றிவைத்த விளக்குத்தான் பிர காசம் என்று வடக்கேயெல்லாம் பிரஸ்தாபம். நான் ஒருத்தி இங்கே வந்து அகப்பட்டுக்கொண்டது போ தாதா? இந்தப் பட்டிக்காட்டில் சம்பந்தம் செய்யா விட்டால் ஊர்களில் அவர்களுக்கும் பெண்கள் கிடை யாது, பாவம்! குழந்தை பெண்ணும் அழகில் ஊர்வசி!' இதுவரையில் நடந்த சம்பாஷணையை எல்லாம் காது கொடுத்து கவனித்துக் கேட்டிருந்த நாகு என்ற ஒரு ஸ்திரீ: 'பணமாம் பணம். இந்த ஊருக்குத்தான் அதிசயம். ஆலையில்லாவூரில் இலுப்பைப்பூ சர்க் கரை. பொன்னம்மாள் மருமகனுக்குக் கொடுத்தால் என்ன! அடா, இல்லை , வைத்துக் கொள்ளட்டுமே. (பொன்னம்மாளைப் பார்த்து) நீதான் எழுதிவிடேன் இவ்விடத்து சம்பந்தம் வேண்டாமென்று உன் உடன் பிறந்தானுக்கு' என்றாள். அதற்குப் பொன்னம்மாள் : 'சூ, இத்தனை நாள்