பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



290 கமலாம்பாள் சரித்திரம் அருளிழந்து கிடக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு அதன் காரணத்தை விசாரிக்க, அவ்வூருக்கு அரசர் போல விளங்கிய அய்யரவர்களுடைய குடும்பம் நிலைகுலைந்து, சின்னாபின்னப் பட்டுப்போனதைக்கேட்டு, அதற்குத் தான் காரணமானதையும் நினைத்து, மிகவும் மன வருத்தமடைந்து, எவ்விதமும் தான் செய்த தீங்குக் குப் பரிகாரம் செய்து விடுவதென்ற பெருந்தன்மை யான வைராக்கியத்துடன் முத்துஸ்வாமி அய்யரைத் தேடிப் புறப்பட்டான். ஊருக்கு ஊர் உளவு விசாரித்துக்கொண்டு செல்லுகையில் ஒரு நாளிரவில் ஒரு வீட்டு வாசற் றிண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். நடுநிசிக்குமேல் அவ்வீட்டுள் இருவர் ஒருவர்மேல் ஒருவர் கடுங்கோபத்துடன் கலக்கப்படுவது அவன் காதில் விழ, அவன் தூக்கத்தை உதறிவிட்டு கவனிப்பானாயினான். கவனிக்கவே அவ்விருவரும் பம்பாயில் முத்துஸ்வாமியய்யருடைய பெருந்திரவி யத்தைக் கூட்டுக்கொள்ளையடித்து ஊர் விட்டோடிய திருட்டுப் பிராமணர்களென்றும், அத்திரவியத் தைப் பங்கிட்டுக் கொள்வதில் அவ்விருவரும் தர்க் கித்துக் கொண்டிருப்பதாயும் அறிந்து, தந்திரமாய் அக்கணமே அவ் வீட்டுள் புகுந்து போலீஸ் உத்தி யோகஸ்தனைப் போல நடித்து அவர்களைக் கலக்க, அவர்கள் கலங்கி அவன் கையிலகப்பட்டார்கள். பிறகு பணத்தைச் சொந்தக்காரரிடம் சேர்த்து விட்டால் அவர்களை சர்க்கார் தண்டனைக்குக் காட்டிக்கொடுப்ப தில்லை என்று அவர்களுக்கு சத்தியம் செய்து கொடுத்து அவர்களை யிட்டுக்கொண்டுபோய் பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடம் சென்று அதைக் கைப்பற் றிக்கொண்டு மூவருமாகக் காசியையடைந்து, முத்து ஸ்வாமியய்யர் தங்கியிருந்த மடத்துக்கே வந்து சேர்ந் தார்கள். திடீரென்று இழந்த திரவியமனைத்தும் குவிய லாய்த் தன்னெதிரே வரப்பெற்றும் முத்துஸ்வாமியய்