பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



292 கமலாம்பாள் சரித்திரம் வுளுடைய நாடகத்தையும், மனிதரது அக்ஞானத் தையுங் கண்டு, வியந்து அவரைக் கைப்பற்றியிழுத்து 'முன்போலும் தங்கள் குழந்தையேதான்; என்னுடைய தானாலென்ன தங்களதானால் என்ன' என்று உப சாரங்கள் சொல்லி அவரைத் தேற்றி துரைசாமியை 'நடராஜா' என்று அருமையாய் அழைத்து பெற்ற என்னைக்காட்டிலும் வளர்த்த அவர் பெரிய பிதா என்று நயந்து சொல்லி தன் மனத்துக்குள் 'சுவாமி! என்ன காரியத்துக்கோ இந்த உன் தந்திரம்' என்று எண்ண, உள்ளேயிருந்த சச்சிதானந்த சுவாமிகள் வெளியேவந்து குழந்தை நடராஜனையும் முத்துஸ்வாமி அய்யரையும் பார்த்து 'கடவுள் செயலுக்கு 'ததாஸ்து' சொல்லுவதே நம்முடைய தொழில், நமக்காக வேண் டியதொன்று மில்லை' என்று தன் சிஷ்யருக்கு எடுத் துக் கூறினார். பிறகு பேயாண்டித்தேவன் தான் சொக் குப்பொடிகாரி ஒருத்தியை அனுப்பிக் குழந்தையைத் தந்திரமாய்க் கைப்பற்றிக் குதிரை மீது வைத்தோடி யதையும், குழந்தையில்லாமல் தவித்துக் கொண்டி ருந்த ராமசேஷய்யருடைய வேண்டுகோளுக்கிசைந்து ஆயிரம் பொன்னுக்கு அவ்வருமைக் குழந்தையை விக் கிரயம் செய்ததையும், தற்செயலாய் அவர்களை இங்கு சந்தித்ததையும் சவிஸ்தாரமாய்ச் சொல்ல, எல்லோரும் கடவுளுடைய திருவருளைக் கொண்டாடினார்கள். பே யாண்டித் தேவன் ராமசேஷய்யரை நோக்கி ' தங்க ளுடைய ஆயிரம் பொன்னையும் திருப்பிக்கொடுத்து விடுகிறேன் யோசிக்கவேண்டாம்' என்று சொல்ல, அவர் 'நானுள்ளவரையில் இந்தக் குழந்தையை விட் டுப் பிரியாதிருக்க வரம் வாங்கித் தருவாயாகில் ஆயிரம் பொன்னுக்கு ஆயிரலட்சம் பொன்னாகக் கொடுத்தது போல' என்று அழுது சொல்ல, முத்து ஸ்வாமியய்யர் 'பயப்படாதேயுங்கள், குழந்தை தங்களதே, தங்க ளதே' என்று தைரியம் சொன்னார்.