பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



296 கமலாம்பாள் சரித்திரம் பிரக்ஞைவந்து, தன் நாயகரத்தினத்தை மறுபடியும் மறுபடியும் பார்த்துப்பார்த்து, இப்பொழுது மறு ஜன னமும், மறு கல்யாணமுமாதலால் தனது பரிமளமான அதரத்தின் முத்தங்களால் மறுபடியும் மணமாலை யிட்டு, தன்னைத் தேடி நொந்துவந்த அவயங்களுக் குக் கண்ணாலும், கையாலும், முகத்தாலும் ஒற்றி ஒற்றி வேது செய்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்றபடி ஒருவரை ஒருவர் தன்னிலும் அன்னியமாக முன்னிலையில் வைத்துப் பேசக்கூடாத படி, முகத்தோடு முகமும், கண்ணோடு கண்ணும், கை யோடு கையும், உடலோடு உடலும், மனத்தோடு மன மும் ஒன்றுபட்டு இருவரும் மாறிப் புளகாங்கித மடைந்து ஈருடலுக்கு ஒருயிராகிய ஸ்ரீநிவாசன் லட்சுமி இவர்களின் நிலைமையை என்னென்று சொல் வேன்! இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ ! மறந்தன ரறிந்துணர்வு வந்தனர் கொலென்கோ ! துறந்தவுயிர் வந்திடை தொடர்ந்தது கொலென்கோ! அல்லது கண்களையிழந்து குருடாய் உழல்பவர் திடீரென்று காட்சி பெற்றார்கள் எனவோ, அல்லது பகவானுடைய கிருபைக்காக நெடுநாள் கொடூர தபசு செய்பவர் திடீரென்று சாட்சாத்காரமாய் அக்கடவு ளைக் கண்ணாரக் கண்டார்களெனவோ! இவர்களுடைய நிலைமை யிவ்வாறாக, சச்சிதானந்த ஸ்வாமிகள் கமலாம்பாளைக் கண்டவுடனேயே அவளு டைய முகவிலாசத்தையும், கம்பீரத்தையும், சாந் தத்தையும் பார்த்து அவள் தன் சீஷருடைய பத்தினி யென ஏதோ எண்ணம் எழ, விரைந்து வந்து, தனது இருகையையும் அவள் சிரமேல் வைத்து ' தீர்க்க சுப மங்கலிபவா' என வாழ்த்தி ' மகாலெட்சுமி யென்றால் உன்னைத் தவிர வேறில்லை' என்று கொண்டாட, வணங்கி நின்ற கமலாம்பாள் சுவாமிகளை நிமிர்ந்து