பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



36 - 'பொறுமையுடையோர் சிறுமையடையார்.' ஸ்ரீநிவாசன்-லெட்சுமிக்கு வடக்கே ஹிமோத்பர் வதத்தைப் போய்ப் பார்த்து வரவேண்டுமென்ற ஆசை. உலகத்திலுள்ள மலைகளெல்லாவற்றிற்கும் பெரியதாய், பயங்கரமான காம்பீரியத்துடன், சிருஷ் டியின் காட்சிகளில் ஒன்றாகி மகோன்னதமான வைப் வத்தோடு விளங்கா நிற்கும் தேவர்கள் வசிக்கத்தக்க ஹிமாலயத்தைக் கண்குளிரக் கண்டுவர அவ்விரு வருக்கும் அதிக ஆசை. ஆனால் சமயம் சரியாக இல்லை. ஆனாலும் அம்மலையிற் பிறந்து, பிறந்த இடத்திற் கியைந்த பெருமையுடன் இரு கரையும் அலைவீசி, ஆர்த்திரைத்து மயிரடர்ந்த சிம்மம்போலவும், திமிள் பெருத்த ரிஷபம் போலவும், மலைக்குணம் நிரம்பிய மதயானைபோலவும், கம்பீரமான கதியுடன் அரசன் பவனி சென்றாற்போல, ஊரூரும் சென்று கடலில் கலக்கும் கடவுள் நதியாகிய கங்கையைக்கண்டு அவர் கள், தங்களை ஒருவாறு திருப்தி செய்துகொண்டார் கள். 'மணல் வீடுகட்டி, அதினடுசோற்றை யுண் டுண்டு தேக்கு சிறியார்கள் போல' அற்ப விஷயங் களில் ஆயுள்களைச் செலவிட்டு 'ஊன கந்தனதாக' உயிரை ஒடுக்கும் சிறியோராகிய நாம் நம்முடைய எல்லையைக் கடந்து கடல், காற்று, மேகம், சூரிய, சந்திர நட்சத்திராதிகள் முதலிய, பெரிய வஸ்துக்களு டன் மனங்கலந்து உறவாடுவதே இவ்வுலகில் ஒரு பெரும்பாக்கியம் அல்லவா ! கமலாம்பாள் முதலிய எல்லோரும் ஒன்று சேர்ந்து இரண்டு மூன்று நாளுக் கப்பால், கட்சி கட்சியாய்க் கங்கா நதியின் வெண்மண லில் வெண்நிலவில், வெண்பொங்கல் முதலிய வைத்து