பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வம்பர் மஹா சபை 19 தாமதமா? அன்றைக்கே 'டெலகராப்' அடித்துவிட் டேனே.' சுப்பு: (தன் மனதுக்குள்) எத்தனை செருக்கு! தலை கழுத்திலே நிற்கவில்லை (என்று சொல்லிக்கொண்டு) 'முத்துஸ்வாமி உங்கள் பேரில் வைத்திருக்கிற அபிமா னதுக்கு ஜாதகம் பொருத்தமில்லையாம். இல்லாவிடில் -உ.ன் மருமகனுக்கே பெண்ணைக் கொடுப்பான்.' நாகு : "ஆமாம், ஜாதகம் ஒரு சாக்கு , சகுனத்தைப் பார்த்து எத்தனை இடங்களில் நடக்கவில்லை, என்ன மோ. "வைத்தியன் பெண்டாட்டி சாகிறதில்லை, வாத்தி யார் பெண் அறுக்கிறதில்லை” என்ற சம்பந்தமாய் இருக்கிறது. மனம் கொண்டது மங்கிலியம். மனப் பொருத்தம் இருந்தால் எல்லாப் பொருத்தமும் இருக் கும். நேற்று மீனாட்சிசுந்தரம் பெண்ணை சங்கரம் பிள் ளைக்குக் கொடுக்க என்ன ஜாதகத்தைப் பார்த்தார் கள்? ஓஹோ என்று கல்யாணம் நடக்கவில்லையோ? அவர்களுக்கு என்ன குறைவு ! "நொண்டிக் கழு தைக்கு சறுக்கினது சாக்கு! பொன்னம்மாள் : 'வெள்ளைக்காரர்களுக்குள் ஜாத கந்தான் பார்க்கிறார்களோ?' சுப்புவும் நாகுவும்: 'ஆ ! அவர்களும் ஜாதகம் பார்க்கத்தான் பார்ப்பார்கள்.' பொன்னம்மாள் : (இவர்களுடைய மூடத்தனத் தைக் கண்டு சிரித்துக்கொண்டு) 'அவர்கள் ஜோஷ்யத் தையே நம்புவதில்லை.' நாகு : 'ஸோஸியம் அவர்களுக்குத் தெரியாதா?' பொன்னம்மாள் 'ஸோஸியமா!' என்று இடி இடி என்று சிரித்துவிட்டு 'ஜோஷ்யம் (ஜோஸ்யம் அல்லது