பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முத்துஸ்வாமியின் பெருந்தன்மை 301 கிணற்றில் விழுந்து மரித்தாள். சுப்பம்மாள் கணவனை யிழந்து உபாதான மெடுத்து வயிறு வளர்க்கிறாள் அவளுக்குக் கண் ஒன்று அவிந்துபோய்விட்டது. ஈசுவர தீட்சிதர் குஷட வியாதியால் வருந்துகிறார். முத்துஸ்வாமியய்யர் இவ்விருவரும் தனக்குச் செய்த பெரிய உபகாரத்துக்காக அவர்களுக்கு மிகவும் வந்தன முள்ளவராயிருக்கிறார். சுப்பம்மாளுடைய ஜீவனத் துக்காக கொஞ்சம் நிலம் விட்டிருக்கிறார். தீட்சிதருக் கும் அடிக்கடி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். துஷ்டர்களை யிப்படி ஆதரவு செய்யலாமா என்றால் அவர் ' நன்மைக்குப் பிரதி செய்யலாம். தீமைக்கு மட்டும் பிரதிசெய்யக்கூடாது. மேலும் நமக்குத் துன்பம் கொடுப்பவர்கள் நமக்குப் பெரிய உபகாரிகள். ஏனெனில் துன்பத்தைப்போல் ஹிதமான சிநேகிதன் யாருமில்லை. எனக்கு அடுத்தடுத்து துன்பங்கள் நேரிட்டிரா விட்டால் நான் இப்பொழுது அனுபவிக் கும் பிரம்மானந்தத்தை அடைந்திருக்கமாட்டேன்,' என்று மறுமொழி கூறுகிறார். எதார்த்தத்திலேயே இவ்வுலக இன்பங்களைப் போல் நமக்கு விரோதிகள் வேறு ஒன்றுமில்லை. நம்முடைய நிஜஸ்வரூபத்தை நம்மிடமிருந்து மறைத்து நாளை வரும் நெற்குவியலிலும் இன்றுள்ள பிடி விதை பெரிதென்று விழுங்கி வீணே நாள் கழிக் கும் ' நீக்ரோ 'ஜாதியாரைப்போல நாம் நாளை அடை யக்கூடிய ப்ரம்மானந்த சுகத்தை மறந்து இன்றுள்ள சிற்றின்பத்தில் முழுகி மயங்கும்படி நம்மைச் செய் கின்ற அற்பமாயும், அநித்தியமாயும், பயனற்றதாயும் தமோகுண சம்பந்தமாயும், துக்கரமாயும், அசுரகுண ஸ்வரூபமாயும், நமக்கும் பிறருக்கும் ஜனனமரண சம்சாரமாகிய அனர்த்த பரம்பரைக்கு ஹேதுவாயும் உள்ள இவ்வகை இன்பங்கள் உயர்ந்தோரால் விரும் பற்பாலனவன்று. ' இங்கற்றவர்க்கு அங்குண்டு "