பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கருத்தொருமித்த காதலரின்பம் 303 செய்யாது அணுகி அப்பூங்கொடி. அரசமரத்தைத் தழுவி நின்றது போல் தானும் அன்பாய் அவனைத் தழுவி நின்றாள். தழுவவே ஸ்ரீநிவாசன் திடுக்கிட்டுத் திரும்பி அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். லட் சுமி அரசமரத்தைக் குறிப்பாய்ப் பார்த்து தன் நாயக னையும் பார்த்து புன்முறுவலித்தாள். ஸ்ரீநிவாசன் பூங்கொடியை நோக்கித் தன் நாயகியையும் நோக்கிப் புன்னகை செய்தனன். அப்படி நிற்கும் பொழுதே படீலென்று பல மல்லிகை மொட்டுகள் கண் திறந்து மலர்ந்தன. மலர்ந்ததைக்கண்டு ஸ்ரீநிவாசன் ' உன் னைக் கண்டதில் அக்கொடிக்கு என்ன ஆனந்தம் பார்!' என்று பரிகாசம் செய்தான். அதைவிட்டு அப்பால் சிறிது தூரம் செல்ல, அவர்கள் ஒரு பிரம் மாண்டமான ஆலமரத்தைக் கண்டார்கள். அது வானுற ஓங்கி, வளம்பெறவளர்ந்து ஏராளமான விஸ் தார முடையதாய் அனேகமான கொடிகளைக் கீழே விட்டு அனேக ஸ்தம்பங்களும், மண்டபங்களும் நிறைந்த ஒரு பெரிய ஆலயம் போல் விளங்கி பரிசுத்த மான காற்று வீசி, அலங்கரித்த தேர்ச் சிகரம் போல் சிகரமுடைத்தாய் , அண்ணல் தேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு மன்னர்கள் தங்கத்தக்க தண் ணிழல் பரப்பிநின்றது. சூரியன் மலைவாயில் விழுகிற தருணமாதலால், அவனுடைய செங்கிரணங்கள் அந்த ஆலவிருட்சத்திற் புகுந்து ரத்தின தீபங்கள் ஏற்றியது போல் ஏற்றி விளங்க, அம்மரத்தினுடைய கம்பீரத் தையும், கொடிகளின் வரிசையான அழகையும், சூரியனுடைய ஒளியையும், தரையில் வீழ்ந்த இள நிழலையும், அவ்வடாலயத்தின் மண்டபங்களையும், ஸ்தம்பங்களையும், சிகரத்தையும், தீபங்களையும் கண்டு ' இதுவன்றோ ஆலங்காட்டார் ஆனந்தக் கூத்தாடிய இடம்' என்று தம் மனதுள் சொல்லி இருவரும் ஒரு வரை யொருவர் கேளாது ஏககாலத்தில் அம்மரத்தின் கீழ் தலைவணங்கிக் கைக்கூப்பினர். கைகூப்பி 'உற்ற