பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



304 கமலாம்பாள் சரித்திரம் உடலும் சிந்தைவசமாதமால்' ஒருவரையொருவர் விரைந்து தழுவி இருவருமாய்ப் பேசாதுபேசி மகிழ்ந் தார்கள். இவர்கள் நாள் இவ்வாறு கழிய குழந்தை நட ராஜன் சுந்தரத்துடன் ஜோடி சேர்ந்துவிட்டான். அவ்விருவரும் ஆற்றங்கரை, தோப்பு, துறவு, கோயில், குளம் முதலிய இடங்களெங்கும் உல்லாசமாய் ஓடி விளையாடுகிறார்கள். விளையாடுவதுடன் சண்டையும் பிடித்துக் கொள்ளுகிறது தான். சண்டை செய்து கொண்டாலும் மறுநிமிஷமேராஜியாய்விடும். ஒருநாள் அவ்விருவரும் ஒரு கிட்டிக்கொம்புக்காகச் சண்டை போட்டுக்கொண்டு விட்டார்கள் சில நிமிஷங்களுக் குப் பிறகு நடராஜன் ஒரு விளாம் பழத்தை எடுத்துக் கொண்டு சுந்தரம் இருந்த இடம் வந்தான். வந்து 'எங்கப்பா எனக்கு விளாம்பழம் தந்திருக்காளே, உனக்குத் தருவேனோ ' என்றான். அதற்கு சுந்திரம் ' நான் எங்காத்தில் ஒரு மொக்கை விளாம்பழம் வச்சிருக்கேனே. அதை உனக்குத் தருவேனோ, நீ தந்தா நான் தருவேன்!' என, நடராஜன் 'நீ தான் என்னை அடித்தாயே ; இனிமேல் அடிக்கவில்லை யென்று சொல்லு தரேன்' என்றான். சுந்தரம் இனி மேல் அடிக்கவில்லை' யென்று சொல்ல, நடராஜன் 'இல்லையென்று கன்னத்திலே போட்டுக்கொள்" என்றான். சுந்தரம் அப்படியே செய்ய, நடராஜன் கன்னத்திலே போட்டுக்கொண்டால் போதுமோ, தோப்புக்கரணம் போடணும்; அப்பத்தான் குடுப் பேன்' என்று சொன்னான். பாவம் சுந்தரம் தோப் புக்கரணமும், போட, நடராஜன் பழத்தைப் பகிர்ந்து ஒருபாதியை அவனுக்குக் கொடுத்தான். உடனே இருவரும் வெகு நேசமாய்விட்டார்கள். இப்படி யவர்கள் விளையாடிவர ராமசேஷய்யருக்கு நடராஜனை விட்டு அரை நாழிகை கூடப் பிரிய மனம்வராது.